Home » , » உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை ஒரே பார்வையில் தரும் மென்பொருள்!

உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை ஒரே பார்வையில் தரும் மென்பொருள்!

  
நீங்கள் மட்டும் பயன்படுத்தும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இணையத்துடன் தொடர்புடைய அப்பிளிகேஷன்களில் ஒவ்வொருமுறையும் என்டர் செய்யாமல் இருக்க பாஸ்வேர்ட்டை நினைவில் வைத்திரு என்ற ஆப்ஸன் மூலம் (கூகுள் டாக், மெஸென்சர்ஸ்) சேமித்துவைத்திருப்பீர்கள். நாளடவையில் எந்த பாஸ்வேர்ட்டுக்களை இவ்வாறு சேமித்துவைத்தீர்கள் என நீங்கள் மறந்து போய்விடலாம். வேறு கணினியில் குறிப்பிட்ட அப்பிளிகேஷனை மீண்டும் பயன்படுத்த வேண்டுமாயின் நீங்கள் சேமித்துவைத்துள்ள பாஸ்வேர்ட்டுக்களை தெரிந்துகொள்வது அவசியமாகின்றது .
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உதவுவதே PasswdFinder என்ற மென்பொருளாகும். இதன் மூலம் கணினியில் பாஸ்வேர்ட் சேமித்துவைக்கப்பட்டுள்ள அப்பிளிகேஷன்களிலிருந்து ஸ்கான் செய்து அவற்றை பெற்றுத்தருவதே இதனது வேலை. எனினும் இந்த மென்பொருள் எவ்வகையிலும் இணையத்துடன் தொடர்புடையதல்ல எனவே இது மிகவும் பாதுகாப்பானதொரு மென்பொருள் என கருதப்படுகின்றது.
கவனிக்க - இப்படியான மென்பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் கணினியை திருத்துவதற்கென வேறுநபர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சேமித்துவைத்துள்ள அனைத்து பாஸ்வேர்ட்டுக்களையும் நீக்கி விடுவது சைபர் குற்றங்களை குறைப்பதற்கு உதவும். உங்கள் தகவல்களும் பாதுகாக்கப்படும்.

nanri:www.seithy.com