Home » , » ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் Video chatting செய்ய

ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் Video chatting செய்ய

வீடியோ வழி சேட்டிங்(VIDEO CHAT) என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. 12 வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது.


                                            

உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும், ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspxஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால், நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன், அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.


அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது.பின்னர், ஓவூ அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும். அடுத்து, பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே, ஓவூ உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும்.


இந்த லிங்க்கினை உங்கள் நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும். அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க் பெறுபவர்கள், இதில் கிளிக் செய்தால், சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ சேட் செய்திட இணைவார்கள்.


என்னுடைய நண்பர் ஒருவர் இவ்வாறு பெற்றவுடன், லிங்க்கில் கிளிக் செய்திட, என் கம்ப்யூட்டரில் தொலைபேசிக்கான மணி அடிப்பது போல் ஒலி கிடைத்தது. இதற்கு பதில் அளிக்க முடிவு செய்து ஓவூ வீடியோ காலிங் இன்டர்பேஸ் திறந்தேன். இணைப்பு வேகமாகவும், படங்கள் துல்லிதமாகவும் இருந்தன. இதில் நண்பர்களை இணைக்க, Add to call பட்டன் அழுத்தி இணைக்கவும்.


ஓவூ சேட்டிங்கில் சைட்பார் வியூ (Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே, இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால், இந்த சைட் பார் வியூவில் சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.


இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கம்ப்யூட்டரே பதில் அளிக்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு, அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால், அது அவர் மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப் படுகிறது.


ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க, மெனு பாரிலிருந்து Contacts அழுத்திப் பின்னர், Import Contacts என்பதனை அழுத்தவும். இதன் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, பலவித சேவை வசதிகளைப் பயன்படுத்தலாம். வீடீயோ கால் ரெகார்டிங், டெக்ஸ்ட் சேட், போன் அழைப்புகளுக்கான சப்போர்ட் ஆகியவற்றை இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


நன்றி:http://www.anbuthil.com