Home » , » ஐ ட்யூன்ஸ் 2500 கோடி பாடல்கள் டவுண்லோட்

ஐ ட்யூன்ஸ் 2500 கோடி பாடல்கள் டவுண்லோட்


பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்ட பாடல்கள் எண்ணிக்கை, சென்ற வாரம் 2,500 கோடியை எட்டியது. 2,500 கோடி எண்ணிக்கையை எட்டிய பாடலை டவுண் லோட் செய்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு ஆப்பிள் நிறுவனம் 13,500 டாலரினை (பத்தாயிரம் ஈரோ) பரிசாக வழங்கியுள்ளது.
ஐ ட்யூன்ஸ் ஸ்டோர், 2003 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திலும் 15,000 பாடல்கள் இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டு வருகின்றன. 119 நாடுகளின் 2 கோடியே 60 லட்சம் பாடல்கள் இந்த தளத்தில் டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இப்போதைய மொத்த டவுண்லோட் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் மூன்று பாடல்கள் என்ற அளவில் இந்த தளம் பாடல்களைத் தந்துள்ளது.



நன்றி:http://www.dinamalar.com