Home » , » ஸ்கைப் அப்டேட் 6.2

ஸ்கைப் அப்டேட் 6.2

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் பிரிவு, ஸ்கைப் அப்ளிகேஷனுக்கான புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களுக்கான அப்டேட்டுகளாக இவை வெளிவந்துள்ளன. 
இதில் புதிய வடிவமைப்பிலான டூல் பார் தரப்பட்டுள்ளது. இதில் ஸ்கைப் மூலம் மேற்கொள்ளக் கூடிய அனைத்து முக்கிய பணிகளையும் தரும் மெனு உள்ளது. போனில் அழைப்பது, புதிய குழுக்கள் மற்றும் காண்டாக்ட் இணைப்பது போன்றவற்றை இதில் மேற்கொள்ளலாம். இதில் eGifting என்னும் புதிய வசதி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் ஸ்கைப் புரோகிராமில் பெறும் கிரெடிட்களை, இன்னொருவருக்கு பரிசாக அளிக்கலாம். பெறுபவர் எப்போது வேண்டும் என்றாலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
இதில் தரப்பட்டுள்ள இன்னொரு புதிய வசதி, கண்ட்ரோல் + என்டர் அழுத்தி, இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியைப் பயன் படுத்தலாம். இந்த புதிய பதிப்பு இன்டெல் பெண்டியம் ப்ராசார் 3 அல்லது அதைப் போன்ற திறன் கொண்ட சி.பி.யு. இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்காது. 
மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களுக்கான ஸ்கைப் பதிப்பிலும் மேலே கூறப்பட்ட வசதிகள் தரப்பட்டுள்ளன.


நன்றி:http://www.dinamalar.com/