Home » , » புகைப்படத்தை கடவுச் சொல்லாக்கும் வசதி உள்ள விண்டோஸ் 8! (படங்கள்,வீடியோ)

புகைப்படத்தை கடவுச் சொல்லாக்கும் வசதி உள்ள விண்டோஸ் 8! (படங்கள்,வீடியோ)


விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணனிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது.
windows8_picturepassword_001
கணனியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
windows8_picturepassword_002
அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.
windows8_picturepassword_003
அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
windows8_picturepassword_004
தெரிவு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.
windows8_picturepassword_005
புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.
windows8_picturepassword_006
கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பின்பு Finish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பின்னர் நீங்கள் கணனியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.











  நன்றி:http://www.tamilcloud.com/