Home » , » புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்

புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்


விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதென்றால் ஏராளமானவர்களுக்கு மிக கடினமான பணியாக உள்ளது . இதுவரை பழகிய விண்டோவை விட்டுவிட்டு ஏன் புதியபழகாத லினக்ஸிற்கு மாறவேண்டும் என தயங்குபவர்கள் நம்மில் ஏராளம் ஏனெனில் நாம் அனைவரும் அந்தஅளவிற்கு விண்டோ இயக்கமுறைமைக்கும் அவற்றில் இயங்கிடும்  பயன்பாடுகளுக்கும் அடிமையாகிவிட்டோம்  இருந்தாலும் இலவசமாக கிடைக்ககூடிய மிக்குறைந்த வன்பொருட்களை கொண்டே இயங்கும்திறன்கொண்ட வைரஸ் மால்வேர் போன்ற எந்த பாதிப்பும் அடையாத புதியவர்கள் எவரும் மிகஎளிதாக இயக்கி பயன்படுத்திகொள்ளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுவருகின்ற பின்வரும் லினக்ஸின் இயக்கமுறைமகளுள் அவரவர்களுக்கு விருப்ப பட்டலினக்ஸ் இயக்கமுறைமையை தரவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திகொள்க
உபுண்டு (Ubuntu): 12.10 ஆப்பிரிக்காவின் கேனோனிக்கல் என்ற நிறுவனத்தாரால் வெளியிடபட்டுவரும் இந்த உபுண்டு இன்று 2012-ல் சுமார் 20 மில்லியனுக்கு அதிகமான புதிய கணினிகள் இந்த உபுண்டு இயக்கமுறைமை நிறுவபட்டே விற்கபட்டுள்ளன மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இதனுடைய புதிய பதிப்பொன்று வெளியிடபட்டுவருகின்றது சமீபத்தில் உபுண்டு12.10 என்ற இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத  புதியவர்கள் இந்தஉபுண்டு இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் இதனை http://www.ubuntu.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்
மின்ட்லினக்ஸ்(Mint Linux):14  உபுண்டு போன்று இதுவும்  லினக்ஸ் வெளியீடாகும் இது ஜினோம்2.எக்ஸ் அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத  புதியவர்கள் இந்தமின்ட்லினக்ஸ் இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் இது  பயனாளர்களின் ஒரு இனிய நண்பனாக விளங்குகின்றது இதனைhttp://linuxmint.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்
ஜோரின் ஓஎஸ் (Zorin OS) 6  என்பது  மேலே கண்ட இரு லினக்ஸ் முறைமைபோன்று மிகபிரபலமானது அன்று ஆயினும் இது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத  புதியவர்கள் இந்த ஜோரின் ஓஎஸ்6 இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் அதாவது விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுபவர்களுக்கான ஒரு நுழைவு வாயிலாக பயன்படுகின்றது  இதனைhttp://Zorinos.com/    என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்
8.1
படம்-8.1
லினக்ஸ் லின்ட் (Linux Linte)1.0.0.  புதியதாக வெளியிடபட்டுள்ள இந்த லினக்ஸ் லின்ட் 1.0.0 என்ற இயக்கமுறைமையானது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாதவர்கள்   கூட இந்த இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் லினக்ஸ் அடிப்படையில் இயங்கிடும்  ஒரு இயக்கமுறைமையானது எவ்வளவு சுலபமாகவும் எளிதாகவும் அதிக நினைவகத்திறன் தேவை என்ற தொந்திரவு ஏதுமில்லாமல் செயல்படுத்திடும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ளது  என இதனை செயல்படுத்தி பாரத்துஅறிந்து கொள்ளமுடியும்
மேலும் இது பொதுமக்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்ற நோக்கத்தில்  வெளியிடபட்டுள்ளது இதனைhttp://linux.softpedia.com/progDownload/Linux-Lite-Download-93641.html  என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்
8.2

நன்றி:http://vikupficwa.wordpress.com/