Home » , » Mozilla Firefox ஒப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட செல்பேசிகள் அறிமுகமாகின்றன!

Mozilla Firefox ஒப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட செல்பேசிகள் அறிமுகமாகின்றன!

News Service
இண்டர்நெட் ப்ரௌஸர் மென்பொருளை அளித்து வரும் மோசில்லா நிறுவனம், ஃபயர்ஃபாக்ஸ் இயங்கு தளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட உள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உலக மொபைல் காங்கிரஸ் மாநாடு தொடங்க இருக்கும் நிலையில், மோசில்லா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் ஃபயர்ஃபாக்ஸ் இயங்கு தளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களுக்குப் போட்டியளிக்கும் வகையில் ஃபயர்ஃபாக்ஸ் இயங்குதளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனைக்காக, உலக அளவில் பிரபலமான 13 செல்போன் சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் மோசில்லா தெரிவித்துள்ளது. முன்னதாக, கணினிகளில் செயல்படும் உபுண்டு இயங்கு தளத்தின் ஸ்மார்ட்போன் பதிப்பும் அண்மையில் வெளியானது.


நன்றி:http://www.seithy.com/