Home » » குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும். இதற்காக கஞ்சமாக இருக்க வேண்டியதில்லை. ஒருசில வித்தியாசமான யோசனைகள் இருந்தாலே, நன்றாக ஊர் சுற்ற முடியும். இப்போது அவ்வாறு உங்கள் காதலியுடன் குறைந்த செலவில் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில டிப்ஸ்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதாவது, எந்த மாதிரியான செயல்கள் அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சில யோசனைகளை கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியுடன் உல்லாசமாக இருங்கள்.

பூங்கா:


 தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது காதலியை பூங்கா அல்லது வேறு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றால், அப்போது இருவரும் நன்கு மனம் விட்டு பேச முடியும். பொதுவாக பேசுவதற்கு தானே ஊர் சுற்ற வேண்டும் என்று இருக்கிறோம். எனவே, இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றால், நன்கு ரொமான்ஸ் செய்வதோடு, பணமும் செலவாகாமல் இருக்கும்.

நடைப்பயணம்:


நீங்களும் உங்கள் துணையும் இயற்கை விரும்பிகளாக இருக்கும் பட்சத்தில், இது உண்மையிலேயே மிகவும் செலவு குறைந்த சந்திப்பாக இருக்கும். இந்த பயணத்தில் உங்களுக்கு ஆகும் செலவு வழியை கண்டுபிடித்தவாறு நடந்து கொண்டிருப்பதும், மற்றும் நொறுக்குத் தீனிகளும் மட்டுமே! இதற்கு நீங்கள் இருவரும் உடல் மற்றும் மனரீதியாக தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

புகைப்படம் எடுத்தல்
கையில் ஒரு கேமராவை வைத்துக் கொண்டு, கண்ணைக் கவரும் காட்சிகளை 'க்ளிக்' செய்யும், இந்த புகைப்பட பயணம் நிச்சயம் குதூகலமாக இருக்கச் செய்யும். டிஜிட்டல் கேமரா இல்லையென்றாலும் கூட, ஒரு சாதாரண கேமரா இந்த பயணத்தை தொடங்க போதுமானதாகவும், செலவை சிக்கனமானதாகவும் வைத்திருக்கும். எப்படியெனில் இந்த முறையில் ஆங்காங்கு நின்று புகைப்படங்கள் எடுக்கும் போது, அது சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருக்கும். இதனால் இருவருக்கும், அந்த தருணம் மிகவும் சிறப்பானதாக, மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.


இரவு விருந்து
வீட்டிலிருந்த படியே ஒரு வேளை சாப்பாடு செய்வது குறைந்த செலவையும் மற்றும் ருசியான உணவையும் கொடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் நீங்களே சமைத்தால், அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. பின் அப்படியே சில மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தால், ஒரு அற்புதமான காதல் உணர்வு பெருக்கெடுத்து ஓடும்.


விளையாட்டுஏதேனும் பப் அல்லது டிஸ்கோ சென்று, அங்கு இருக்கும் ஏதேனும் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே, விலைக் குறைவான ஏதேனும் உணவு அல்லது பானங்களை வாங்கி, பேசிக் கொண்டே விளையாடலாம். இந்த சந்திப்பு, கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.


டான்ஸ் நிகழ்ச்சிவெளியே செல்ல நினைக்கும் நாட்களில், நீங்கள் இருப்பது பெரிய நகரமாக இருந்தால், அந்த ஊரில் நடக்கும் ஏதேனும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றால், நன்றாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவும் குறைந்த செலவில் உள்ள ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.


டான்ஸ் வகுப்புபல்வேறு நடன நிறுவனங்கள் தொடக்க நிலை நடன வகுப்புகளை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வழங்குகின்றன. எனவே நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து கொண்டால், அந்த வகுப்பில் உள்ள ஸ்விங், ஸல்சா, அல்லது டாங்கோ வகை நடனங்கள் கொஞ்சம் அதிகமான நெருக்கத்தை தருவதோடு, மிகுந்த சந்தோஷத்தையும் கொடுக்கும்

சுற்றுலாஉங்கள் காதலியை ஏதேனும் ஒரு தனிமையான இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இவ்வாறு செல்லும் போது, வீட்டில் ஏதேனும் உணவுப் பொருட்களை செய்து கொண்டு போகலாம். மேலும் அந்த இடத்தில் அவர்கள் மடியில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தால், பசி உணர்வு கூட இல்லாத அளவில் ரொமான்ஸ் கொடி கட்டி பறக்கும்.


நீச்சல் குளம்/கடற்கரைவீட்டிற்கு அருகில் கடற்கரை அல்லது நீச்சல் குளம் இருந்தால், வீட்டில் உணவை சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் உட்கார்ந்து பேச சரியானதாக இருக்கும். இதனால் அதிகமான செலவைத் தடுக்கலாம்.


நன்றி:http://tamil.boldsky.com/