Home » » வேர்ட் டிப்ஸ்

வேர்ட் டிப்ஸ்


வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:




வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள் களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல் களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திட லாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.
1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனை யிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப் பட்டு கிடைக்கும். 
2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள். 
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்கவும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும்.
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும். 
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை பத்து செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும். 
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேற வும்.

சென்டிமீட்டரில் வேர்ட்:




வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அது தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் மாற்றவும்.
1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் “Measurement Units” என்று இருப்பதன் அருகே உள்ள மெனுவை விரித்து நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Inches, Centimeters, Millimeters, Points, or Picas என்ற அளவுகளைக் காணலாம்.
4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


நன்றி:http://www.dinamalar.com