Home » » கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘பேசும் காலணிகள்’!

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘பேசும் காலணிகள்’!


google-unveils-talking-shoeஅமெரிக்காவின் கூகுள் நிறுவனம், கணினி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனமாகும். இக்கம்பெனி, தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை, நகலெடுத்தல் மற்றும் குறியீடு தொடர்புகளை சிறப்பிக்கும் வண்ணம் புதுமைகளைப் புகுத்தி வருகின்றது.
கூகுள் கண்ணாடி மூலம் கைகளின் உதவி இல்லாமல், வலைத்தள தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று காட்டிய இக்கம்பெனி, தற்போது பேசும் காலணிகளை இவர்களின் விளம்பர உத்திக்காக வெளியிட்டுள்ளனர்.
அடிடாஸ் கம்பெனியின் விளையாட்டுக் காலணிகளைத் தேர்வு செய்து, சிறிய கம்ப்யூட்டர், ஆக்சிலரோமீட்டர், கைராஸ்கோப், அழுத்தத்தைக் குறிக்கும் சென்சார்கள், ஒலிபெருக்கி மற்றும் புளூ டூத் போன்றவற்றைப் பொருத்தியுள்ளனர்.
ஒருவர் இந்தக் காலணிகளை அணிந்துகொண்டால், அவர்கள் செய்துகொண்டிருப்பதை புளூ டூத் மூலம் அவரின் தொலைபேசிக்கோ, ஒலிபெருக்கி மூலம் அவருக்கோ தகவல் பெறமுடியும்.
இந்த முயற்சி, ஒருவர், தான் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் வலைத்தளத்தில் தகவல்கள் கூறலாம் என்பதை தெரிவிப்பதாக, இந்த விளம்பர மையத்தின் அதிகாரி, அமான் கோவில் கூறுகின்றார். இதனை நகலெடுத்து உருவகப்படுத்தினால், இந்தக் காலணிகள் பேசும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நன்றி:http://www.tamilcloud.com