Home » » அறிமுகமாகின்றது அப்பிளின் iPhone 5S !

அறிமுகமாகின்றது அப்பிளின் iPhone 5S !

News Service
அப்பிளின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 5எஸ் ஆனது தோற்றத்தில் ஐபோன் 5 வைப் போன்றதாகவே இருக்குமெனவும் வேகமான புரசசர் மற்றும் மேம்பட்ட கெமராவினைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர குறைந்த விலையில் ஐபோன் ஒன்றையும் ஐபோன் 5எஸ் உடன் அப்பிள் வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி புதிய ஐபேட் ஒன்றையும் அப்பிள் இவ்வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
  
இதேவேளை அப்பிளின் நேரடி போட்டியாளனும், பெரும் தலையிடியாகவும் மாறியுள்ள நிறுவனமான செம்சுங் தனது கெலக்ஸி வரிசையின் புதிய ஸ்மார்ட் போனான கெலக்ஸ் 4 எஸ்ஸினை இம்மாதம் 14 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான அழைப்பை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதுடன் இது நிவ்யோர்க்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சுமார் 3 வருடங்களின் பின்னர் செம்சுங் சுமார் தனது ஸ்மார்ட் போனொன்றிற்கான அறிமுக நிகழ்வை அமெரிக்காவில் நடத்தவுள்ளது.


நன்றி:http://www.seithy.com