Home » » கூகுள் கணக்கினை மரணத்திற்கு பின்னர் எப்படி கையாள்வது?

கூகுள் கணக்கினை மரணத்திற்கு பின்னர் எப்படி கையாள்வது?

News Service
உலகின் மிகப் பெரிய இணைய சேவை நிறுவனங்களில் முக்கியமான கூகிள், தனது பாவனையாளர்களின் கணக்கினை அவர்களின் மரணத்துக்குப் பின்னர் எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து புதிய சேவையினை அறிமுகப் படுத்தியுள்ளது. Google Inactive Account Manager எனப்படும் இந்த சேவையின் மூலம் பாவனையாளர்கள் திடீரென மரணமடைந்தால் அவரது கணக்கு எவ்வளவு காலத்துக்கு பாவனையின்றி இருக்க வேண்டும் என்பதையும் அதன் பின் அதை யார் எவ்வாறு கையாள முடியும் என்பதையும் நாம் முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள முடியும்.
அதாவது இந்த தானியங்கி செயற்பாட்டின் மூலம் நாம் விரும்பினால் நாம் இறந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நமது கணக்கை பிறருடன் பங்கிட்டுக் கொள்வதற்கோ அல்லது முற்றாக அழித்து விடுமாறோ கட்டளைகள் பிறப்பிக்க முடியும். இதனை நாம் தொடர்ச்சியாக 3, 6, 9 அல்லது 12 மாதங்கள் பாவிக்காமல் விட்ட பின் நமது அனுமதியின்றி இவ்வாறு தானாகவே செயற்பட வைக்க முடியும். அதாவது நாம் பாவிக்கும் கூகிளின் சேவைகளான ஜிமெயில், புளாக்கர், தொடர்புகள், கூகிள்+, கூகிள் வொயிஸ், மற்றும் யூ டியூப் ஆகியவற்றை நமக்கு நெருக்கமான இன்னொருவருடன் நாம் இறந்த பின் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் இச்சேவையினை நாம் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது நாம் மரணித்து குறிப்பிட்ட காலம் வரையிலான செயலின்றி இருக்கும் காலம் கழிந்த பின் நாம் குறித்து வைத்துள்ள இரண்டாவது முகவரிக்கு நாம் உயிருடன் உள்ளோமா என அறிவதற்கு ஒரு மின்னஞ்சல் அலேர்ட் அனுப்பப் படும். அதற்குப் பதில் அளிக்கா விட்டால் நாம் குறித்து வைத்த காலம் கழிந்த பின் நமது கணக்கை அழித்து விடவோ அல்லது நெருக்கமானவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்கோ கூகிள் முயற்சிக்கும். இதற்காக நாம் அவர்களின் அனுமதியுடன் முன்கூட்டியே குறைந்தது 10 நபர்களின் விபரங்களை இந்தச் சேவையில் பதிந்து வைக்க முடியும்.