மென்மையான உதடுகளை பெற சில மருத்துவ ஆலோசனைகள்.

நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ, அப்படியேதான் உதடுகளும். ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட, உதடுகளும...


நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ, அப்படியேதான் உதடுகளும்.
ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட, உதடுகளும் ஒரு காரணம். எனவே, உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீர், குளிர்ந்த நீர் இவற்றை மாறி மாறி 10 நிமிடங்களுக்கு உதடுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு மூன்று முறை கொடுத்து வந்தால், உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.
சிலருக்கு உதடுகளின் இரு ஓரங்களிலும், புண்கள் போல் வெள்ளையாக இருக்கும். இது வைட்டமின் குறைவினால் ஏற்படக்கூடியது. வைட்டமின் “பி” உள்ள உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதை நிவர்த்தி செய்யலாம்.
உதடுகளில் காணப்படும் வெடிப்பிற்கு, நெய் அல்லது வெண்ணெயை தொடர்ந்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
பத்து கிராம் ரோஜா இதழை, 10 கிராம் டீத்தூளுடன் சிறிது தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். ஆறியதும் உதடுகளுக்கு அந்த நீரை ஒத்தடம் கொடுத்தால் உதடுகளிலுள்ள கருப்பு மறையும்.


நன்றி:http://www.tamilkathir.com/

Related

beauty 3491827808793121070
item