Home » » பீரை உள்ளே விடாமல், வெளியில் பூசுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!

பீரை உள்ளே விடாமல், வெளியில் பூசுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!

girl-with-beer
பீர் அதிகம் குடித்தால் தொப்பை வந்து அழகை கெடுத்துவிடும். ஆனால் அதே பீரை உடலுக்கு வெளியில் பயன்படுத்தினால் அழகு பூத்துக் குலுங்கும்.
பீர் சருமத்திற்கு மட்டுமின்றி, முடிக்கும் நல்லது. பீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராகவும் திகழ்கிறது. அதிலும் பீரை சருமத்திற்கும், முடிக்கும் பலவாறு பயன்படுத்தலாம்.
01. மென்மையான சருமம்
சருமத்தை உடனே மென்மையாக்குவதில் பீர் உதவுகிறது. மேலும் சருமத்தை மென்மையாக்கும் வைட்டமின் பி-யும் அதிகம் அடங்கியுள்ளது.
02. அடர்த்தியன தலைமுடி
முடியை பீர் கொண்டு மசாஜ் செய்து அலசி வந்தால், முடியானது நன்கு அடர்த்தியாக வளரும்.
03. முகப்பருக்கள் அகலும்
பீரில் உள்ள சில ஆன்டி-பாக்டீரியல் பொருள், முகப்பருக்களை போக்க உதவியாக உள்ளது. ஆகவே முகத்திற்கு போடும் ஃபேஸ் பேக்குகளில் சிறிது பீர் சேர்த்து வாருங்கள்.
04. சருமத்தின் ph சமச்சீர் பேணப்படும்
பீருக்கு, சருமத்தில் உள்ள pH-இன் தன்மையை சீராக வைக்கும் சக்தி உள்ளது. சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளான வறட்சி, அதிகப்படியான எண்ணெய் போன்றவை ஏற்படுவதற்கு காரணம், சருமத்தின் pH தன்மை சரியாக இல்லாததே ஆகும். எனவே இதனை சரும பராமரிப்பிற்கு பீர் பயன்படுத்துவது நல்லது.
05. முதுமையை பிற்போடும்
பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முதுமை தோற்றம் விரைவில் ஏற்படுவதை குறைக்கும்.
06. சரும மாசுக்கள் அகலும்
பீரை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கும்.
07. பப்புள் குளியல்
அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பணம் செலவழிக்க தயாராக இருப்பவர்கள், பப்புள் குளியல் என்னும் பீர் குளியலை மேற்கொள்ளலாம். இதனால் சருமமும், முடியும் நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
08. சரும வறட்சியை தடுக்கும்
பீர் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுப்பதில் சிறந்தது. அதிலும் குளிக்கும் போது, பீரைக் இறுதியில் ஒரு முறை உடலில் ஊற்றி குளித்தால், கடுமையான சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
09. இயற்கையான ஹேர் கண்டிஷனர்
முடிக்கு ஒரு நல்ல இயற்கையான ஹேர் கண்டிஷனர் என்றால், அது பீர் தான். எனவே தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பு போட்டு முடியை அலசியதும், இறுதியில் பீரை முடியில் ஊற்றினால், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
10. அழகான சருமம்
பீரை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடுவதால், சருமம் பொலிவோடு காணப்படும்.



நன்றி:http://tamilcloud.com/