Home » » அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்(Theodore Roosevelt) வரலாறு.

அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்(Theodore Roosevelt) வரலாறு.

எழுத்தாளர், சட்டத்தரணி,அரசஊழியர் என்று அறிமுகமாகி,யதார்த்தபூர்வ தலைவர் என்ற கௌரவத்தை சர்வதேச மட்டத்தில் பெற்றவர்.இளம் வயது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு,தற்போதைய அமெரிக்காவை கட்டி எழுப்புவதற்கு முக்கிய பணியாற்றியவர் தான் தியோடர் ரூஸ்வெல்ட்(Theodore Roosevelt).
நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறந்த இவர், இளம் பருவத்திலேயே பூரண ஆரோக்கியமற்றவராக இருந்தார். எனினும் குத்துச் சண்டைப் போட்டியில் ஆர்வம் மிக்கவராக விளங்கி, பல நாடுகளுக்கு சென்று குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு கொண்டார்.
பள்ளிப்பருவத்திலேயே எழுத்தாற்றலை வெளிப்படுத்திய இவர்,பாடசாலைக்கென சஞ்சிகையை வெளிக்கொண்டுவந்தார். இவரது உடல் நிலை குறித்து வைத்தியர்கள் எச்சரித்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் குத்துச் சண்டைப் போட்டியில் பிரகாசித்து,குத்துச் சண்டை வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.
பாடசாலைக் கல்விக்குப் பின் கொலம்பிய சட்டக் கல்லூரியில் பிரவேசித்து,நியூயோர்க்கின் கீழ் அமைச்சர் சபையின் பிரதிநிதியாக நியமனம் பெறுவதற்காக,மக்கள் ஆதரவிற்கு முயற்சித்தார்.இதன் காரணமாக இவர் குடியரசு (republican )உறுப்பினராக மக்கள் பணியில் ஈடுபட்டார்.இவரது முதலாவது திருமணத்தின் போது மகள் பிறக்க,தாயைப் போன்றே மனைவியும் இறந்தார்.துயரம் தாங்க முடியாமல் தொலை தூரம் சென்று வாழ்ந்து, அங்கு பல நூல்களை வாசித்தார். மேற்கத்திய நாடுகளில் இருந்து வெளிவந்த நூல்களில் இவர் அதிக ஆர்வம் காட்டினார். நகர சபைத்தேர்தல் ஊடாக அரசியலில் பிரவேசித்து,தோல்வி கண்டதால் லண்டன் பயணமானார்.
இரண்டாவது மனைவியைத் திருமணம் முடித்து, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் ஈடுபட்ட காலப்பகுதியில், நூல்களையும் எழுதினார்.சரித்திர ஆய்வுகள்,மற்றும் அது தொடர்பான நூல்களை எழுதுவதில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அமெரிக்க சரித்திரவியலாளர்களின் சங்கத்தின் தலைவராக நியமனம் பெற்றார்.

அரசியல் பிரவேசம்

1988 இல் பெஞ்சமின் ஹரிசன் ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கையின் மூலம் மீண்டும் அரசியலில் பிரவேசித்தார். சிவில் சேவை சங்கத்தின் ஆணையாளர் பொறுப்பேற்று, தேவையான பல மாற்றங்களை மக்களிடம் அறிமுகம் செய்தார்.
தொடர்ச்சியாக ஐந்து வருட காலம் பணியாற்றிய பின்னர், நியுயோர்க் நகரின் போலிஸ் கமிஷனராக பதவியைப் பொறுப்பேற்று, இரு வருட காலத்திற்குள் ஊழல் மோசடி சின்னத்துடன் இருந்த பொலிசை மாற்றியமைத்து, நற்பெயரையும் பெற்றுக்கொடுத்தார். சட்ட திட்டங்களைக் கடுமையாக்கி, தவறிழைப்போருக்கு தண்டனை வழங்கினார்.
நகர மக்களின் பாதுகாப்பிற்காக புதிய நடைமுறைகளை அமுல்படுத்தினார். சைக்கிள்கள் மூலமான ரோந்து நடவடிக்கைகளை அறிமுகம் செய்தார். இவற்றை அவதானித்த அமெரிக்கத்தலைவர் இவருக்கு புதிய சவால் ஒன்றை விடுக்க, அமெரிக்க கடற்படையின் இணைப்புச் செயலாளராக பொறுப்பேற்ற இவர், " எந்த நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்கத்தயார் என்றும், யுத்தம் ஒன்று மூண்டால் அதற்கும் தயார்" என்றும் கூறியதோடு, அதனை நிரூபிக்க, அவ்வேளையில் அமெரிக்கா, ஸ்பானியாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டது. கடற்படையில் இருந்த ரூஸ்வெல்டும் யுத்த களத்திற்குச் சென்றார். இந்த யுத்தத்தில் வெற்றிபெற கடற்படை மட்டும் போதாது என்று உணர்ந்து, தரைப்படையின் துணையுடனும், கவ்பாய் குழுவையும் ஒன்றிணைத்து தனிப்படையணி ஒன்றை அமைத்தார்.
எதிரிகளை அடிமைப்படுத்தியது அமெரிக்காவின் உடனடி வெற்றிக்கு வழி வகுத்தது . இவர் யுத்தத்திற்காக தன்னையே அர்ப்பணித்து செயற்பட்டதன் காரணமாக, பின் நாளில் இவருக்கு "அமெரிக்கா மைந்தருக்கான விருதும்" கிட்டியது.
அக்காலத்தில் திறமை மற்றும் துணிச்சலான செயற்பாடுகள் ,எதிரியை எதிர்கொள்ள தனிப்படை அமைத்தமை முதலானவை குறித்து ஊடகங்கள் வெகுவாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தை போன்றே சமாதனத்திற்க்கும் அமைதிக்கும் பங்காற்ற இவர் தவறவில்லை .போர்க்கள வீரனாக இருந்த இவருக்கு நியூயோர்க் நகர ஆளுநர் பதவியுடன், மீண்டும் அரசியலில் ஈடுபட சந்தர்ப்பம் கிட்டியது .
வில்லியம் மெகேன்லினை அமெரிக்காவின் ஜனாதிபதியாக்கும் முயற்சியை மேற்கொண்ட ரூஸ்வெல்ட் உப ஜனாதிபதியாக நியமனமானார் . நகரினதும் நாட்டினதும் பாதுகாப்பு , ஜனநாயகம் தொடர்பாக முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொண்டதோடு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, தமது அனுபவங்களையும் பயன்படுத்தினார்.
ஒரு கொலை சம்பவம் காரணமாக, ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி விடைபெற்று செல்ல , பலரின் விருப்பத்துக்கு இணங்க, ஜனாதிபதியாக நியமனம் பெற்றார் .
அப்போதிருந்த அமைச்சரவையுடன் தொடர்ந்து செயற்பட்டார் . நிர்வாகத்தின் போது நிர்வாக அதிகாரி அல்லாமல், மக்கள் சேவையாளனாகவே செயற்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் மத்தியில் வலியுறுத்தினார்.
மக்களது உரிமைக்கே முதல் இடம், பின்னர் தான் தனி நபர் என்ற கோட்பாட்டுக்கே இவர் முக்கியத்துவம் வழங்கினார் . இளமைப்பருவத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து ,அதனால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை தமது நிர்வாகத்துக்கு அடிப்படையாக கொண்டார்.
யுத்தகளம் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகிய இரு பல்வேறுபட்ட துறைகளிலும் அனுபவங்களை கொண்டிருந்த இவரின் கொள்கையினால், மக்கள் இவரது நிர்வாகத்தில் மதிப்பு வைத்தனர் .இதன் காரணமாக இவர் ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான புதிய சட்டங்களை கொண்டு வந்தார்.உணவு வகைகளின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தியதோடு, சூழல் பாதுகாப்புக்கு உதவும் மிருகங்களின் சுதந்திரத்துக்கான சட்டங்களையும் வகுத்தார் .
இதன் காரணமாக தொடர்ந்து வந்த தேர்தலில் 56 .4 % ஆன மக்களின் வாக்குகளை பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் . சிறந்த வெளிநாட்டு கொள்கை ஒன்றையும் இவர் கடைப்பிடித்தார் .
அதுமட்டுமன்றி, அமெரிக்காவின் இறைமையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியதோடு, கியூபா ,பிலிப்பைன்ஸ் முதலான நாடுகள் அமைத்த பனாமா கால்வாயை நிர்மாணிப்பதில் உழைத்ததுடன் , உலக பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் உதவினார் .
இராணுவத்தின் உதவியுடன் நாட்டின் வீடுகளை புதிதாக நிர்மாணித்ததுடன், புதிய ரெயில் பாதையையும் அமைத்தார் .கடற்படைக்கு புதிதாக ஆட்களை திரட்டி அமெரிக்காவின் அதிகாரத்தை உறுதிசெய்தார் .
நாட்டின் தேசிய கொள்கையை மறுசீரமைப்பு செய்து மக்களுக்காக புதிதாக பலவற்றை செய்வதில் கூடிய சிரத்தையை மேற்கொண்டார் .நீண்டகால உழைப்பினால் களைப்படைந்திருந்த இவர், வனப்பகுதியில் ஓய்வெடுக்கலானார்.அங்கு வேட்டையாடுவதில் ஈடுபட்டு, வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல் முதலானவற்றை அமெரிக்கா நூதன காட்சி சாலைக்கு கொண்டு வந்தார்.நூல்களை எழுதுவதற்கு இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் .
இவர் 35 நூல்களை எழுதியுள்ளார் . குறிப்பாக, The Naval War of 1812 (1882 ), The Winning of the West (1889 ), African Game Trails (1910 ), Autobiography (1913 ), America and the world war (1915 )போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தமது இறுதி காலகட்டத்தில் அமேசன் வனாந்தரத்தில் சுற்றுலா மேற்கொண்ட போது, மலேரியா நோய்க்கு உட்பட்டார் .
1858: 1858-10-27 பிறப்பு.
1876: ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி.
1880: முதலாவது திருமணம்-ஹெலயிஸ் ஹெத்வே லீ.
1881: நியூயோர்க் கீழ் சபையின் பிரதிநிதி.
1886: இரண்டாவது திருமணம்- எடித் குரோ.
1886: நியூயோர்க் நகர முதல்வர் பதவிக்குப் போட்டி.
1888-1895:அமெரிக்கா அரசசேவை ஆணைக்குழுவுக்கு நியமனம்.
1895: நியூயோர்க் பொலிஸ்கமிஷனராக நியமனம்.
1897: கடற்படையின் இணைப்பு செயலாளராக நியமனம்.
1898: நியூயோர்க்கின் 36 வது ஆளுநராக நியமனம்.
1901: அமெரிக்காவின் 25 வது உப ஜனாதிபதி.
1901-1909:அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதி.
1906: நோபல் சமாதான விருதுக்கு தெரிவாகுதல்.
1919: 1919 -01 -06 இறப்பு.




நன்றி:http://www.tamilkathir.com/