Home » » உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த 3 வழிகள்!!!

உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த 3 வழிகள்!!!

உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த 3 வழிகள்!!!

தற்போதுள்ள நவநாகரீக நவீன யுகத்தில், அழகியல் குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய முக அழகு யாராலும் பாராட்டப்படுவதில்லை. எனவே ஒரு முழுமையான அழகு என்பது முகத்தோற்றத்தில் மட்டுமின்றி உடல் அமைப்பையும் பொறுத்தது ஆகும். எனவே இத்தகைய அழகிய கட்டான உடலழகைப் பெறுவதற்கு வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளால் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, அழகான உடல் அழகைப் பெறலாம். இப்போது அதிகப்படியான எடையைக் குறைப்பதற்கு கீழ்க்கண்ட சில வழிமுறைகள் பெரிதும் உதவியாக இருக்கும். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இனிப்புப் பொருட்களைத் தவிர்த்தல் இனிப்புச் சுவையை அதிகம் விரும்புபவராக இருந்தால், உணவுக்குப் பின் உண்ணும் டெசர்ட் எனப்படும் இனிப்பு உணவை நிச்சயம் சாப்பிடுவீர்கள். ஆனால் இனிப்பு கலந்த உணவு உண்பதை உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் சர்க்கரையானது, கலோரியைத் தவிர வேறு எதையும் தருவதில்லை. ஆகவே சர்க்கரை உள்ள  உணவை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டாம் பிடித்த படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது தம்மை அறியாமலேயே அதிகமான உணவை எடுத்துக் கொள்ள நேரிடும். எனவே தொலைக்காட்சி பார்க்கும் பொழுது உணவு உண்பதைத் தவிர்த்து விடவும்.

உணவு குறித்த கையேட்டைத் தயார் செய்தல் உணவு வகைகளை உண்ணும் பொழுது, என்னென்ன சாப்பிடுகிறோம், அதனுடைய கலோரியின் அளவு எவ்வளவு, போன்றவற்றைக் குறித்து வைத்துக் கொண்டால், எந்த உணவுப் பொருள்களையெல்லாம் எடுத்து கொள்கிறோம் என்பதையும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வும் மனதில் ஏற்படும்




நன்றி:http://health.tamilmedia24.com/