Home » » காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

காய்ச்சல் இருக்கும் போது சாப்பிடவே பிடிக்காது. அந்த நேரம் மருந்து மாத்திரைகள் மட்டும் தவறாமல் எடுத்துக் கொண்டு இருப்போம். இருப்பினும் மருந்து மாத்திரைகள் போட வேண்டுமென்று உணவுகளை சாப்பிட்டாலும், அவை வெளியே வந்துவிடும். இதற்கு காரணம் அதிகப்படியான காய்ச்சல், செரிமான கோளாறு மற்றும் நாவில் சுவையின்மை தான். ஆனால் அவ்வாறு சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல், மேலும் தான் காய்ச்சலானது நீடிக்குமே தவிர, குணமாகாது. மேலும் காய்ச்சலின் போது சாப்பிடக்கூடிய சில உணவுகள் உள்ளன. அவை உடலுக்கு சத்துக்களை வழங்குவதோடு, காய்ச்சலை சீக்கிரம் போக்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. பொதுவாக காய்ச்சல் இருக்கும் போது அனைவரும் கஞ்சியைத் தான் சாப்பிடுவோம். அவை மட்டுமின்றி, இன்னும் வேறு சில உணவுகளும் உள்ளன. அத்தகைய இந்திய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, காய்ச்சல் இருக்கும் போது சாப்பிட்டு, காய்ச்சலில் இருந்து சீக்கிரம் விடைபெறுங்கள்.

சாதம் காய்ச்சலின் போது சாதத்தை கஞ்சி போல் செய்து சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையை உண்டாக்காமல் இருப்பதோடு, உடலில் இருந்து வெளியேறிய நீர்ச்சத்தையும் அதிகரிக்கும்.

சூப் காய்ச்சல் ஏற்படுவதற்கு சளி மற்றும் ஜலதோஷமும் ஒரு காரணம். எனவே இத்தகைய சளி மற்றும் ஜலதோஷத்தை, ஒரு பௌல் சூடான தக்காளி அல்லது கேரட் சூப் குடிப்பதன் மூலம் குணமாக்கலாம். அதுமட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கிச்சடி காய்ச்சலின் போது சாப்பிடுவதற்கு கிச்சடியும் சிறந்த உணவு தான். இந்த இந்திய உணவு மென்மையாகவும், செரிமானத்தை எளிமையாகவும், குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.

உருளைக்கிழங்கு வேக வைத்த உருளைக்கிழங்கில், மிளகு தூள் மற்றும் கிராம்பு தூள் சேர்த்து, காய்ச்சலின் போது சாப்பிட்டால், சளி மற்றும் ஜலதோஷத்திலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.


நன்றி:http://health.tamilmedia24.com/