Home » » பீட்ரூட் மசாலா

பீட்ரூட் மசாலா

beetroot masala recipe பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், பிடிக்காது. ஆனால் அத்தகைய பீட்ரூட்டை விரும்பி சாப்பிடும் வகையில் சமைத்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியெனில் அதற்கு பீட்ரூட் மசாலா தான் சிறந்தது. இப்போது அந்த பீட்ரூட் மசாலாவை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 2 அல்லது 2 1/2 கப் (துருவியது அல்லது துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, துருவிய அல்லது துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை சேர்த்து, 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும். பின்பு அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். பீட்ரூட்ரானது வெந்ததும், அதனை இறக்கி சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரான இருக்கும்.



நன்றி:http://tamil.boldsky.com/