Home » » வெயில் காலத்தில் அழகை பாதுகாக்க..

வெயில் காலத்தில் அழகை பாதுகாக்க..

altவெயில் காலத்தில் அரிசி- உளுந்துமாவில் பேஸியல் செய்தால் முகத்தில் புத்துணர்ச்சி பொங்கும்

* உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கபட்ட லிப் கிரீம்களை உபயோகியுங்கள்.

 * வெளியில் செல்லும் போது பச்சை பாலில் மசாஜ் செய்து மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.

* வெயிலில் நடப்பது மேனி அழகுக்கு பாதிப்பு தரலாம். வெள்ளரி-தக்காளி சாறை சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்து குளித்தால் தோலில் நிறம் மங்காது.

* கோடை காலத்தில் பாத வெடிப்பு வந்து பாடாய்படுத்தும். வெங்காயத்தை வதக்கி விழுதாக அரைத்து தடவுங்கள். பாத வெடிப்பு படிப்படியாக குறையும்.

* இரவில் தூங்கும் போது தேங்காய் எண்ணெணை முகத்தில் பூசிக் கொண்டு தூங்கி காலையில் முகம் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

* பெண்களுக்கு கழுத்தின் முன்பாகம், அக்குள்,தொடை இடுக்கு, இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகு போன்ற இடங்களில் அதிகம் வியர்த்து வேர்க்குரு தோன்றும். சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவி வாருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.




நன்றி:http://www.sikams.com