Home » » பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடம்

பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடம்

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில், மீண்டும் பில் கேட்ஸ் முதல் இடம் பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வரை இந்த இடத்தைப் பிடித்திருந்த பில் கேட்ஸ், பின்னர் சற்று கீழிறங்கினார். தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அமெரிக்க பங்குச் சந்தையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக வேகமாக உயரத்திற்குச் சென்றதினால், இதில் அதிகப்பங்குகளைக் கொண்டிருக்கும் பில் கேட்ஸ், மீண்டும் முதல் செல்வந்தராக உயர்ந்துவிட்டார். பில் கேட்ஸின் செல்வ மதிப்பு 7,201 கோடி டாலராக உள்ளது. இதற்கு முன் முதல் இடத்திலிருந்த, மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம் சொத்து மதிப்பினைக் காட்டிலும், 55 கோடி டாலர் கூடுதலாக செல்வம் கொண்டுள்ளார் பில் கேட்ஸ்.
2007 ஆம் ஆண்டு முதல், பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா, தர்ம காரியத்திற்கென 2,800 கோடி டாலருக்கு மேல் வழங்கியுள்ளனர். இருவரும் சேர்ந்து, தங்கள் சொத்து மதிப்பில் 95 சதவீத பணத்தை தர்மத்திற்கென செலவழிக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டிலிருந்து, 2008 ஆம் ஆண்டு தவிர, 2009 ஆம் ஆண்டு வரை, பில் கேட்ஸ் முதல் இடத்திலேயே இருந்து வந்தார். 2008ல் மூன்றாவது இடத்திலும், 2011ல் அமெரிக்க பணக்காரர்களில் முதலாவதாகவும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இருந்தார்.




நன்றி:http://www.dinamalar.com