Home » » கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை.

கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை.

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உட‌லை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டபோதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக்கண்டுகொண்டான். தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது.
உடேன, அரண்மைனைய விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான். இத்தனை நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பொளர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவதுக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் ‘இக்கணத்தில் வாழு’ என்பதாக உதித்தது.
கி.மு.563‍ல் நேபாள நாட்டின் கபிலவாஸ்துவில், அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தேபாதே, ஜோதிடர்கள், ‘இவன் அரசனாக அல்லது ஆன்மிக குருவாக உலைகையே ஆட்சி புரிவான்’ என எதிர்காலத்தைக் கணித்துவிட்டார்கள். மகன் பேரரசனாக வேண்டும் என்பதற்காக அரண்மனைக்கு உள்ளேயே எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தான் சுத்தாதனன். 16 வயதிலேயே திருமணமும் முடித்து வைத்தான். திகட்டத் திகட்ட இன்பம் அனுபவித்த சித்தார்த்தனுக்கு, ஒரே ஒருநாள் கிடைத்த வெளியுலக தரிசனம் அகக் கண்களை திறந்துவிட்டது. அரண்மனை, பதவி, செல்வாக்கு, புகழ், உணவு, உறக்கம், மனைவி, மகன், பணியாட்கள் என அத்தைனயும் உதறித் தள்ளி, வெளியேறினான் சித்தார்த்தன்.
35-வது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும், தான் கண்டுணர்ந்த உண்மைகளை சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார் புத்தர். ‘‘மனித வாழ்வு என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். வாழ்வு சுலபமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தனை, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுறை, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியான செயல்பாடு ஆகியவை வேண்டும்! மனிதர்கள் நேற்றைய பயத்தினால், நாளைய வாழ்வை எண்ணி நடுங்குகிறார்கள்.
நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!’’ என்றார் புத்த பெருமான்.
அவரது 80-வது வயதில், இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின் கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது நான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார்.
வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது ‘இக்கணத்தில் வாழு’ என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
நன்றி:http://www.tamilkathir.com/