Home » , » விரைவில் விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10

விரைவில் விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, முதலில் வெளியான போது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்திற்கு மட்டுமென வெளியானது. இதற்கு பல திசைகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இது இயங்கும் வகையில் தரப்பட வேண்டும் என வேண்டுகோள்கள் வெளியானதால், மைக்ரோசாப்ட் அதற்கு ஒத்துக் கொண்டது. தொடர்ந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 தொகுப்பினை வடிவமைத்து, தான் நம்பிக்கை வைத்துள்ள சில வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சோதனை செய்து வருகிறது. இதனுடைய வெளியீட்டிற்கு முந்தைய சோதனை தொகுப்பினை இவர்களுக்கு அனுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, விரைவில் பொது மக்களுக்கு, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பயன்படுத்தக் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 10 ஐ, எதிர்பார்க்கலாம்.






நன்றி:http://www.dinamalar.com/