Home » , , » முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காய மாஸ்க் போடுங்க..

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காய மாஸ்க் போடுங்க..

அனைவருக்கும் வெங்காயம் என்றாலே எரிச்சல் தான் வரும். ஏனெனில் அதனை நறுக்கும் போதெல்லாம், கண்களில் இருந்து கண்ணீர் வருவதாலேயே ஆகும். ஆனால் அத்தகைய வெங்காயத்தைப் பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஏனெனில் இதில் தடைப்பட்ட முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கும் பொருளான சல்பர் அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் பொடுகுத் தொல்லையை தடுக்கும். ஆகவே முடி உதிர்தலை தடுக்க நினைப்போர் மற்றும் அழகான வலுவான முடி வேண்டுமென்பவர்கள் வெங்காய மாஸ்க்கை ட்ரை பண்ணலாம். குறிப்பாக வெங்காய மாஸ்க்கை முடிக்கு போடுவதால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் வருமே என்று சிலர் கேட்கலாம். இருப்பினும் முடியின் வளர்ச்சிக்கு சகித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களே! இங்கு சில வெங்காய மாஸ்க்குகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து முடியின் வளர்ச்சிக்கு செய்யும் அதிகப்படியான செலவை நிறுத்திவிட்டு, இதனை ட்ரை செய்து, நல்ல பலனைப் பெறுங்கள். குறிப்பாக இந்த செயலை தொடர்ச்சியாக குறைந்தது ஒரு மாதமாவது செய்ய வேண்டும். சரி, இப்போது வெங்காயத்துடன் எந்த பொருட்களையெல்லாம் சேர்த்து தலைக்கு மாஸ்க் போடுவது என்று பார்ப்போமா!!!

வெங்காய சாறு

வெங்காயத்தை நறுக்கி, அதனை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, சூடான நீரில் நனைத்து பிழிந்த ஈரத்துணியை தலையில் சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்

ரோஸ்மேரி எண்ணெய்

இந்த மாஸ்க்கிற்கு, வெங்காயச் சாற்றுடன், சிறிது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரமாவது ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளர்ச்சியடைவதோடு, இதில் உள்ள ரோஸ்மேரி எண்ணெய் வெங்காய துர்நாற்றத்தை குறைக்கும்.

ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெங்காயச் சாற்றில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையை மயிர்க்கால்களில் தடவி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது இறுதியில், ஒரு கப் தண்ணீரில் முடியை அலசினால், முடியில் உள்ள வெங்காய நாற்றத்தைப் போக்கலாம்.

பீர் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்தப் பின்னர், அதில் சிறிது பீர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, சுடு நீரில் நனைத்து பிழிந்த துணியை சுற்றிக் கொண்டு, 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

தேன்

வெங்காயச் சாற்றில் தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்து, இறுதியில் எலுமிச்சை நீரில் முடியை அலசினால், முடி நன்கு பொலிவோடு மின்னும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

ரம்

இந்த கலவைக்கு நறுக்கிய வெங்காயத்தை, 1 டம்ளர் ரம்மில், இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து முடிக்கு அந்த கலவைக் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கூட செய்யலாம்.






நன்றி:http://tamil.boldsky.com/