Home » , » இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்

இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்

 Prepare your heart-healthy recipes, and avoid the use of salt-laden processed foods.இதய நோயை தடுக்க பாதுகாப்பான இதயத்தை பெற ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடவேண்டும். உலகம் முழுவதும் மாரடைப்பிற்கு முக்கய காரணமாக இருப்பது மாரடைப்பு.  இதயத்தை பாதுகாத்து கொள்வது கடினமானது அல்ல உணவு முறையை கடைபிடித்து இதயத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளையும் மேம்படுத்த வேண்டும். கரிம உணவு மற்றும் குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளே இதயத்தின் சிறந்த நண்பனாக கருதப்படுகிறது. கெட்ட கொழுப்புகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கும் சில பருப்பு வகைகள், விதைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்..பருப்புகள் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் கொண்டிருப்பதால் இவை உகந்தவையாக இருக்கின்றன. இதயத்தை பாதுகாத்துக்கொள்ள பயிற்சி மேற்கொள்வதால் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும், உடல் எடையை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

இதயத்தை பாதுகாத்துக்கொள்ள உதவும் பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துககொள்ள வேண்டும். காய்கறிகள் பழங்களில் இயற்கையாகவே அதிக ஃபைபர் கொண்டுள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. பழங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்வதால் இதயத்தை மகிழ்ச்சியாக்கி நல்ல சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. கானாங்கெளுத்தி, டுனா மற்றும் சால்மன் ஒமேகா 3 போன்றவற்றில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

எண்ணெய் பசை கொண்ட மீன்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத்தை பாதுகாத்து இரத்தநாளத்தில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது-. பருப்புகள் மற்றும் விதைகளை உட்கொள்வதால் வைட்டமின் ஈ அளவை அதிகரித்து கொழுப்பு சத்துகளை தடுக்கிறது..இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளான சமைத்து பதப்படுத்தபட்ட நிலையில் இருக்கும் உணவுகள் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஆவகோடா பழங்களை உண்பதால் கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக இயக்குகிறது. ஆவகோடா பழங்களை துண்டுகளாகவோ, சாலட்டுகளாகவோ ரொட்டி துண்டுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம். ஆவகோடா பழங்களில் கலோரி அளவு அதிகம் கொண்டுள்ளது. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள் ஆகியவை ஆரோக்கியமான இதயத்தை உருவாக்குகிறது. பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை வேகவைத்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமான இதயத்தை பெறுங்கள்....





நன்றி:http://www.dinakaran.com