Home » » முக்கல சொரக்காய புளுசு

முக்கல சொரக்காய புளுசு

Bottle gourd, pumpkin vitaiyetuttu, the skin is cut up into small pieces and cook on medium-term and takeஎன்னென்ன தேவை?

சுரைக்காய் - 150 கிராம்
பூசணிக்காய் - 150 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
அரைக்க:
மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
தனியா - முக்கால் டீஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
தேங்காய் - 2 துண்டு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 150 மில்லி.

எப்படி செய்வது?

சுரைக்காய், பூசணிக்காயை விதையெடுத்து, தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி நடுத்தர பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் (குக்கரில் வைத்தால் 1 விசில் போதும்). அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல், பச்சை வாசனை போக வறுத்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை துண்டாக்கி, அதையும் மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். புளியை தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, பாதியளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம், பச்சை மிளகாயை கீறிப்போட்டு தாளியுங்கள்.

அதில், அரைத்து வைத்துள்ள மசாலாப் பொருட்கள் மற்றும் தக்காளி பேஸ்ட்டைப் போடுங்கள். தக்காளியின் பச்சை வாசனை மங்கி, வதங்கி எண்ணெய் மேலே வந்ததும், தீயை மிதமாக்கி, மிளகாய் தூளையும் உப்பையும் போட்டு, வேகவைத்த காய்களை கொட்டி மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றி கிளறுங்கள். பின் புளியை ஊற்றி, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவையுங்கள். வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்குங்கள். கமகம முக்கல சொரக்காய புளுசு ரெடி.




நன்றி:http://www.dinakaran.com/