Home » » ஆப்பிள் டோஸ்ட்

ஆப்பிள் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:

முட்டை - 2
பால் - 1/2 கப்
ஆப்பிள் அரைத்த கூழ் - 4 டேபிள் ஸ்பூன்
சுகர் லைட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்
கோதுமை பிரட் - 8 துண்டுகள்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரிப் பழம் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) தேன் - தேவையான அளவு

செய்முறை:

• ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் பின் அதில் பால் மற்றும் ஏலக்காய் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• பின்னர் அதில் அரைத்த ஆப்பிள் மற்றும் சுகர் லைட் சேர்த்து, சுகர் லைட் கரையும் வரை கலக்க வேண்டும்.

• பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

• கல் சூடானதும், அதில் வெண்ணெயை தடவி, பின் பிரட் துண்டுகளை முட்டைக் கலவையில் நனைத்து, தோசைக் கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.

• இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

* இதன் மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரிப் பழங்களால் அலங்கரித்து, தேனுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

• இப்போது சூப்பரான ஆப்பிள் டோஸ்ட் ரெடி!!!





நன்றி:http://www.sikams.com/