Home » » நெய் சாதம்

நெய் சாதம்

 Ghee rice  Basmati rice to soak for a while, then loose, loose and burst into place to heal. Ghee in a pan and put on medium fire, thin, as long as   ponniram sliced ​​onions, moru, moruvena porittetuttu put aside.என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 2 கப்,
முந்திரி - அரை கப்,
வெங்காயம் - 2,
கரகரப்பாகப் பொடித்த மிளகு - 2 டீஸ்பூன்,
நெய் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு உதிர், உதிராக வடித்து, ஆற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, மிதமான தீயில் வைத்து,  மெலிதாக, நீளமாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக, மொறு, மொறுவெனப் பொரித்தெடுத்துத் தனியே வைக்கவும். அதே நெய்யில் பொடித்த  மிளகு சேர்த்து வதக்கி பின், வடித்து ஆற வைத்த சாதத்தைச் சேர்த்து, மெதுவாகக் கலக்கவும். வறுத்து வைத்துள்ள வெங்காயத்தையும், தேவையான  உப்பையும் சேர்த்துக் கிளறவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சாதத்தின் மேல் அலங்கரித்துப் பரிமாறவும்.





நன்றி:http://www.dinakaran.com/