Home » » பீட்ரூட் ஜூஸ் செய்யும் முறை ..?

பீட்ரூட் ஜூஸ் செய்யும் முறை ..?

தேவையான பொருட்கள்...

பீட்ரூட் - 2
புதினா - 1 கைப்பிடி
பனைவெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய் - 1
பால் - அரை கப்

செய்முறை...

• பனைவெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.

• பீட்ரூட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும்.

• பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.

• அந்தத் தண்ணீரை அப்படியே வைத்துக் கொண்டு, பீட்ரூட்டை மட்டும் எடுத்து, புதினா, ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்சியில் அடித்து, வடிகட்டவும்.

• வடிகட்டிய ஜூசில் பொடித்த பனைவெல்லத்தைப் சேர்த்து, பீட்ரூட்டை ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.

• டயட் செய்வோருக்கு ஸ்கின் க்ளோயிங் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்





நன்றி:http://www.daytamil.net/