Home » » பட்டர் சிக்கன் எப்படி செய்வது?

பட்டர் சிக்கன் எப்படி செய்வது?


என்னென்ன தேவை?

சிக்கன்- தேவையான அளவு
வெண்ணெய்-3 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-2
இஞ்சி-1டீஸ்பூன்
பூண்டு-3
பெரிய வெங்காயம்-2
தக்காளி-3
சின்ன வெங்காயம்-5
மல்லித்தூள்-1சிட்டிகை
உப்பு-தேவைக்கேற்ப
புதினா-10 இலைகள்
மல்லித்தழை- தேவையான அளவு
கறிவேப்பிழை-சிறிதளவு
எப்படி செய்வது?

நன்கு கழுகி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். கடாயில் வேகவைத்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(குக்கரில் வேகவைத்தால் தண்ணீர் வேண்டாம்). சிக்கன் வெந்ததும் தண்ணீர் இருப்பின் திறந்து வைத்து மூடாமல் மீதம் இருக்கும் தண்ணீரை வற்ற விடவும்.

சிக்கனை மசாலாவுடன் சேர்த்து பிசைந்து வெண்ணெய்யை கடாயில் உருகக்கி கறிவேப்பிலை, பல்லாரி சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த சிக்கனில் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும். எண்ணெய் கொப்பளிக்கும் வரை சிக்கனை நன்கு டார்க் கலராகும் வரை அடிபிடிக்ககாமல் கிளறவும். பட்டர் சிக்கன் ரெடி.








நன்றி:http://www.daytamil.net/