Home » , » குட்டீஸ்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

குட்டீஸ்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Tirantaccu schools. Now showing mulkituvanka patippula. Tensanla do not eat anything that was too worriedபள்ளிகள் திறந்தாச்சு. இனி பசங்க படிப்புல மூழ்கிடுவாங்க. அந்த டென்ஷன்ல எதையுமே உருப்படியா சாப்பிடுவதில்லை என்ற கவலை பெரும்பாலான பெற்றோர்களிடம் உள்ளது. குழந்தைகளுக்கு எது சத்தான உணவு, எந்தெந்த உணவை கொடுக்கலாம், காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்கள் குறித்து உணவு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ் உங்களுக்காக:

உணவில் அரிசிக்கு அடுத்து கோதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இதேபோல் கேழ்வரகு, தினை, சாமை, வரகு தானியங்களை தனித்தனியாக மாவாக்கி, தோசை, ஊத்தப்பம் செய்து தரலாம்.

சத்துக்களின் அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி சாப்பிட வைக்க வேண்டும். மதிய உணவில் காய்கறிகள் இடம் பெறுவது அவசியம். குழந்தைகளின் வளர்ச்சிக்கான புரதச்சத்து பாலில் உள்ளதால் தினமும் 300 மில்லி. பால் தருவது அவசியம்.

பள்ளி செல்லும் முன் காலையில் சாப்பிடாவிட்டால் டிபன் பாக்ஸில் கொடுத்துவிடலாம். பள்ளி வேனிலோ, பஸ்சிலோ சாப்பிட்டு போக சொல்லுங்கள். வாரத்திற்கு மூன்று முட்டை, இரண்டு முறை அசைவம் தரலாம். மீன் உணவு சிறந்தது.

தினமும் ஒரு பழம், இரண்டு காய்கறிகள் சேர்க்க வேண்டும். மாலை நேரங்களில் அரிசி, கேழ்வரகு, பாசிப்பருப்பு புட்டு, பால், சீனிசேர்த்த அவல், நிலக்கடலை, சுண்டல் இவற்றை தினமும் ஒன்றாக மாற்றி கொடுக்க வேண்டும்.





நன்றி:http://www.dinakaran.com/