Home » » எப்படி வரும் டிரஸ் சென்ஸ்?

எப்படி வரும் டிரஸ் சென்ஸ்?

When all four of us, look good opinion about us erpatumpati in mind, we should be wearing that dress 'Dress sense' call.நாலு பேர் நம்மைப் பார்க்கும்போது, பார்ப்பவர் மனதில் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படும்படி நாம் உடுத்தும் உடை இருக்க வேண்டும்  என்பதைத்தான் ‘டிரஸ் சென்ஸ்’ என்கிறார்கள். படித்து, பார்த்து, கேட்டு, அனுபவித்து எப்படி அறிவை வளர்த்து கொள்கிறோமோ, அதே போலத்தான்  உடை உடுத்துவது தொடர்பான அறிவும். 

இது நாம் அணிந்திருக்கும் முறை, உடைகளின் மேட்ச்சிங், கலர் என பல விஷயங்களைச் சார்ந்து அமைகிறது. சில நேரம் உடலின் நிறம், ஹேர்  ஸ்டைல், அணியும் கண்ணாடி போன்றவை கூட டிரஸ் சென்ஸில் சேரும்.பொதுவாக வண்ண வண்ண உடைகளை அணிய எல்லோருக்கும் ஆசை.  ஆனால் உடை நமது உடலுக்கேற்றபடி அமையுமா என்பதையே முதலில் கவனிக்க வேண்டும். 

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். சிலர் ‘ஃபிட்’டான உடை என்றால் ‘டைட்’டான உடை என நினைத்துக்கொள்கிறார்கள்.  இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். உடை உடுத்துவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் ஆக வேண்டுமானால், உடையை விதம்விதமான  காம்பினேஷன்களில் அணிந்து பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்வதுதான் ஒரே வழி. 

நீங்கள் அணியும் உடை உங்கள் மனதுக்கு மட்டும் பிடித்தால் போதாது, மற்றவர்களிடமும் அபிப்ராயம் கேட்க வேண்டும். மேலும் நண்பர்கள்,  தெரிந்தவர்கள், ரோட்டில் போவோர் வருவோர் என மற்றவர்கள் உடை அணிந்திருப்பதைக் கவனித்து அதில் உங்களுக்குப் பிடித்ததை உள்வாங்கியும்  முயற்சித்துப் பார்க்கலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களது டிரஸ் சென்ஸ் அபாரமானதாகத் திகழும்.





நன்றி:http://www.dinakaran.com/