Home » , » அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஃபாலோ பண்ணுங்க..

அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஃபாலோ பண்ணுங்க..

அனைவருக்குமே எப்போதும் அழகாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் அந்த அழகுப் பொருட்களில் உள்ள கெமிக்கலால் அழகே பாழாகிவிடும். எனவே பலர் இயற்கை முறைகளை பின்பற்ற முயற்சி செய்வார்கள். என்ன தான், இயற்கை முறைகளை பின்பற்றினாலும், ஒருசில பழக்கவழக்கங்கள் மூலமும் அழகானது பாழாகும். எனவே இயற்கையாகவே அழகாக திகழ வேண்டுமெனில், ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற்று அழகாகலாம். அத்தகைய பழக்கவழக்கங்கள் என்னவென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், மேக்-கப் இல்லாமலேயே அழகாய் திகழ முடியும். சரி, இப்போது அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சரும பராமரிப்பு

தினமும் இரவில் தூங்கும் முன், முகத்தில் இருக்கும் மேக்-கப்பை சரியாக நீக்கிவிட்டு தூங்க வேண்டும். இதனால், பருக்கள் மற்றும் பிம்பிள் வருவதை தவிர்க்க முடியும். மேலும் வெளியே வெயிலில் செல்லும் முன், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

முடி பராமரிப்பு

எப்போதும் முடியை தவறாமல் பராமரிக்க வேண்டும். அதிலும் வாரந்தோறும் முடிக்கு, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் மாஸ்க் போட்டு குறிக்க வேண்டும். இதனால் முடி ஆரோக்கியமாக உதிராமல், வளர்ச்சியடையும்.

நன்கு சாப்பிடவும்

என்ன தான் சருமம் மற்றும் முடியை வெளிப்புறத்தில் பராமரித்தாலும், உடலில் சத்துக்கள் இருந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், சருமமும் பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும்.

போதுமான தண்ணீர் குடிக்கவும்

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவுடன் திகழும்.


புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும்

புகை மற்றும் மது இரண்டுமே உடலுக்கு உலை வைக்கக்கூடியவை. எவ்வளவு தான் அதைப் பருகி சருமம் பொலிவானாலும், உடலின் உட்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே ஆரோக்கியமான முறையில் அழகாக இருக்க வேண்டுமெனில், இத்தகைய பழக்கங்களை கைவிடுவதே நல்லது.

யோகா மற்றும் உடற்பயிற்சி

தினந்தோறும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், எப்போது இளமையான தோற்றத்திலேயே இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இவைகளை செய்யும் போது உடலின் தசைகள் இறுக்கமடைவதோடு, கொழுப்புக்கள் கரைந்து, உடல் ஸ்லிம்மாக மாறும். மேலும் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, உடலில் இருந்து அனைத்து வித நச்சுக்களும் வியர்வையாக வெளியேறி, அழகாக திகழ உதவியாக இருக்கும்.

தியானம்

தற்போது பெரும்பாலானோருக்கு மன அழுத்தமானது அதிகம் உள்ளது. இதனாலேயே உடல் பாதிக்கப்படுவதோடு, அழகும் பாழாகும். எனவே தினமும் தியானம் மேற்கொண்டால், தியானத்தின் போது செய்யப்படும் மூச்சுப்பயிற்சியானது, மன அழுத்தத்தை குறைத்து, நரம்புகளை தளர்வடையச் செய்து, மனதிற்கு ஒருவித ரிலாக்ஸைக் கொடுப்பதால், தானாகவே அழகு அதிகரிக்கும்.

நல்ல தூக்கம்

தினமும் 7-8 மணிநேரம் தூங்கினால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, மனமானது ரிலாக்ஸாகி, தானாகவே முகமும் அழகாக காணப்படும்.

நன்றி:http://tamil.boldsky.com/