Home » » மோர் பற்றிய தகவல்

மோர் பற்றிய தகவல்


நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். நீர்ச் சத்து
அதிகம் என்பதால், நாக்கு வறட்சியைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். இதில்
ப்ரோ பயோடிக்ஸ் (Probiotics) இருப்பதால், வயிற்றுப்போக்கு, தொற்றுநோய்
வராமல் தடுக்கப்படும். வயிற்றுக் கோளாறு இருப்பவர்களுக்கு மோர் நல்லது.
கால்சியம், புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ ஆகியவை
குறைந்த அளவே இருக்கின்றன. காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக்
கூடாது என்று ஒரு தவறான கருத்து உண்டு. மோரைக் கரைக்கும்போது
சேர்க்கப்படும் தண்ணீர் அசுத்தமாக இருந்தால், காய்ச்சல், சளி அதிகமாகும்.
மற்றபடி எந்த நேரத்திலும் எல்லோரும் அருந்த உகந்தது.



நன்றி:iruvarullam.blogspot.com