Home » » அவல் ஃப்ரைடு ரைஸ்

அவல் ஃப்ரைடு ரைஸ்

 Her clean, stone removed, washed, soaked in water for 10 minutes, and add filter.
என்னென்ன தேவை?

கைக்குத்தல் அவல் - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,
பீன்ஸ், கேரட்,
குடமிளகாய் - தலா 100 கிராம்,
வெங்காயத் தாள் - சிறிது,
கீறிய பச்சை மிளகாய் -2,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பூண்டு - 10 பல்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அவலை சுத்தம் செய்து, கல் நீக்கி, கழுவி, 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, முதலில்  வெங்காயத் தாளின் வெள்ளைப் பகுதியை நறுக்கி வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கேரட், பீன்ஸ், குடமிளகாய்,  முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, உப்பு தூவி வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும், வடிகட்டி வைத்துள்ள  அவலைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். பிறகு வெங்காயத் தாளின் பச்சைப் பகுதியைச் சேர்த்து, மிளகுத்தூள் தூவிப்  பரிமாறவும். பச்சரிசியில் கிளைசமிக் இன்டக்ஸ் அதிகம் என்பதால் அதைத் தவிர்த்து அவலில் செய்திருக்கிறோம். இதில் நார்ச்சத்தும், இரும்புச் சத்தும்  அதிகம். அஜினோமோட்டோ தேவையில்லை. குடமிளகாயின் வாசனையே அதை ஈடுகட்டி விடும்.



நன்றி:http://www.dinakaran.com/