Home » » அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்!!!

அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்!!!நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும், நாம் எல்லோரும் நினைப்பதை போல் சாதாரணமானது இல்லை. ஏனெனில் அல்சைமர் என்ற மூளைத்தேய்வு (மனநோய்) எந்த வயதில் வேண்டுமானாலும் தாக்கலாம். இந்த நோய் வந்தால், வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும் என்று பெரியவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஏனெனில் இது ஒரு வகையான ஞாபக மறதி நோய். தற்போது பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது.

 ஆகவே இந்த அல்சைமர் நோய் உண்டாக்கும் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்க உண்டான வழிமுறைகளை பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். சரி, இப்போது அந்த நோய்க்கான 10 அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி பார்ப்போமா!!!அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள்!!!
ஞாபக மறதி


பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, குறித்த சந்திப்புக்களை மறப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, புதிதாக கற்பதில் பிரச்சனை ஏற்படுவது போன்றவைகள் ஒரு குணமாக மாறத் தொடங்கிவிடும். பல வகை டிமென்ஷியா (ஞாபக மறதி) உள்ளது/ அதனால் நீண்ட கால மறதி அல்லது குறைந்த கால மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிலசமயங்களில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களையும் கூட மறந்து விடுவார்கள்.


யோசிப்பதில் திணறுவது


எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். ஏன், தங்களின் சொந்த வரவு செலவு கணக்குளைப் பராமரிப்பதில் கூட தடுமாறுவார்கள்.


செயல்பாடுகளில் கஷ்டப்படுவது


இந்த வியாதி உள்ளவர்கள் இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களை கூட துணையில்லாமல் புரிய முடியாது.


மோசமாக மதிப்பீடு செய்வது மற்றும் முடிவு எடுப்பது


காரணங்களை எடுத்து கூற திணறல் உள்ள போது, மாற்று வழிகளை முடிவு செய்ய அவர்களால் முடிவதில்லை. உதாரணத்திற்கு, கோடைக்காலத்தில் மெல்லிய பருத்தி ஆடையை அணிவதற்கு பதிலாக குளிர் கால ஜாக்கட்டை அணிவார்கள்.


நேரம், தேதி மற்றும் இடத்தின் திசையமைவை இழப்பது


இந்த வியாதியினால் தற்போதைய நேரம், தேதி மற்றும் நாளை மறந்து விடுவார்கள். ஏன், ஆட்களையும் இடங்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போய் விடுவார்கள். தங்கள் வீட்டின் முகவரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்றவற்றை கூட மறந்து விடுவார்கள்.


தொடர்பாற்றலில் பிரச்சனை


தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சனை அல்லது வார்த்தைகளை எழுதுவதில் பிரச்சனை போன்றவற்றை இந்த நோய் உள்ளவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.


ஆளுமையில் மாற்றங்கள்


இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், எளிதில் உணர்ச்சிவசப்படுதல் மற்றும் காரணமே இல்லாமல் சந்தேகப்படுதல் போன்ற ஆளுமை மாற்றங்களை காணலாம். அவர்கள் சமுதாயத்துடன் நன்கு பழக கூடிய ஆட்களாக இருந்தாலும் கூட, தங்களை தனிமைப்படுத்தி அமைதியுடனேயே இருப்பார்கள்.


குணங்களில் மாற்றங்கள்


இந்த வியாதி தாக்கப்பட்டவர்களின் குணங்கள் திடீர் மாறுதல்களை அடையும். அவர்களின் மனநிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். காரணமே இல்லாமல் சிறிது நேரத்திற்கு கடுஞ்சினத்திற்கு உள்ளாவார்கள். சில நேரம் மூர்க்கத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.


பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்கள்


இல்லாத ஆட்கள் மற்றும் விலங்குகள் இருப்பதாகவும், அவர்களின் குரல் கேட்பதை போலவும் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வார்கள். மாயத்தோற்றங்கள் பொய் காட்சிகளை உருவாக்கும். உதாரணத்திற்கு தங்களின் இறந்த தந்தையை காண்பதும், அவர் இன்னும் இறக்கவில்லை என்று நம்புவதும்.


சித்தப் பிரமை


இந்த நோய் இருக்கும் போது, அடுத்தவர்களின் எண்ணத்தின் மீது அளவுக்கு அதிகமாக காரணமே இல்லாமல் சந்தேகப்பட தூண்டும். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும். உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும்.
அல்சைமர் நோய்க்கான தடுப்பு வழிகள்!!!மூளைக்கு வேலை கொடுத்தல்


கல்வி, விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகள், ஊக்குவிக்கும் மொழி என இவை அனைத்தும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவும் என்று சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவ மையத்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் பென்னெட் கூறியுள்ளார். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள். கற்பதை தொடருங்கள், நீண்ட நாட்கள் வாழ்ந்திடுங்கள், அல்சைமரை தடுத்திடுங்கள்.


இணையதளத்தை அலசிடுங்கள்


இணையதளத்தில் தினமும் ஒரு மணி நேரம் தேடுதலில் ஈடுபடுவது, புத்தகம் படிப்பதை விட, வயதாகும் மூளையை புதுப்பிக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஆர்வமுள்ள படிப்பவர்களால் இதனை நம்ப முடியாது தான். ஆனால் இது தான் உண்மை. கூகுள், பிங் அல்லது இதர தேடல் பொறியை பயன்படுத்துகிறீர்களா? தொடர்ந்து பயன்படுத்துங்கள். இது மூளையை சுறுசுறுப்பாக வைத்து அல்சைமரை தடுக்கும்.


உடற்பயிற்சி


தினமும் ஆயிரக்கணக்கான புதிய மூளை அணுக்களை வளர்ப்பது கண்டிப்பாக சாத்தியமே என்று கார்பர் கூறியுள்ளார். அல்சைமரை தடுக்க அவர் கூறிய 100 எளிய வழிகளில் ஒன்று தான், உடலுக்கும் மூளைக்கும் உடற்பயிற்சி அளிப்பது.


தியானம்


வாழ்க்கை நலமுடன் இருக்க முக்கிய புதையலாக விளங்குகிறது தியானம். தியானத்தில் நீங்கள் ஈடுபடாதவரா? அப்படியானால் அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை எப்படி நீக்குவது, நன்றாக எப்படி படிப்பது போன்றவற்றை தெரிந்து கொள்வீர்கள். மேலும் இது இல்லாமல் எப்படி இத்தனை நாட்களை கழித்தோம் என்று எண்ணவும் தோன்றும்.


காபி குடியுங்கள்


நடுத்தர வயதின் போது தினமும் 3-5 கப் காபி பருகினால், அல்சைமர் நோயில் இருந்து 65 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று ஐரோப்பாவில் நடந்த ஒரு ஆய்வு கூறுகிறது. மூளைக்கு நல்லதென்றால் செய்ய வேண்டியது தானே, எதற்கு தயங்க வேண்டும்?


ஆப்பிள் ஜூஸ் பருகுங்கள்


காபி பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள். உங்களுக்கு கை கொடுக்க ஆப்பிள் ஜூஸ் உள்ளது. ஞாபக இரசாயனமான அசிடில்கோலினின் உற்பத்தியை ஆப்பிள் ஜூஸ் அதிகரிக்கச் செய்யும். அதனால் இது அல்சைமரை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.


தலையை காத்திடுங்கள்


அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமை பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம். திகைக்க வைக்கிறது அல்லவா? குறிப்பாக மற்றவர்களை விட கால் பந்து விளையாடுபவர்களுக்கு தான் பல வகையான ஞாபக நோய்கள் தாக்க 19 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தலையை காத்திடுங்கள்.


தொற்றுகளை தவிர்க்கவும்


சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்கு பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாக துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள். ஒருவேளை அதனால் பாதிக்கப்பாட்டாலும் அதனை சீக்கிரமே சரி செய்யுங்கள்.


வைட்டமின் டி வகை உணவுகளை உட்கொள்ளுங்கள்


வைட்டமின் டி சத்தின் குறைபாடு அதீத அளவில் இருக்கும் போது, அறிவுத்திறன் பாதிப்படைய 394 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஹெர்ரிங், கானாங்கெளுத்தி, சால்மன், சாலை மீன் போன்ற சில வகையான மீன்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ளது. மேலும் சில பானங்கள், காலை உணவுகள் மற்றும் இதர உணவு வகைகளிலும் வைட்டமின் டி அடங்கியுள்ளது.நன்றி: http://tamil.boldsky.com/