Home » , , » புற்றுநோய் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுக்கட்டுப்பாடுகள்!!!

புற்றுநோய் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுக்கட்டுப்பாடுகள்!!!

புற்றுநோய் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுக்கட்டுப்பாடுகள்
உலகில், பெரியவர்கள் மூன்றில் இரண்டு பங்கும் மற்றும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கும் உடல் பருமனோ அல்லது அதிக எடையுடனோ காணப்படுகிறார்கள். இவ்வாறு அதிகப்படியான உடல் எடையானது, பல வகையான புற்றுநோய்க்கான இடர்பாட்டை அதிகரிப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம், பொதுவாக மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஆரோக்கியமான உணவு பராமரிப்பைப் பின்பற்றாமல் இருப்பதன் மூலம் ஏற்படுகிறது என்று கூறுகிறது.


நம்ம எதிரிக்குக் கூட இந்த நோய் வரக்கூடாது என்று நினைக்கும் அளவு புற்றுநோயானது கொடிய நோயாக உள்ளது. புற்றுநோயானது வந்தால், அது உடலின் ஒரு பகுதியில் அசாதாரணமான ஒரு கட்டுப்பாடில்லாத உயிரணுக்களில் பிரிவை ஏற்படுத்தி, உடலுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் புற்றுநோய் பற்றிய ஏராளமான நோய் குறிப்புகளை கேட்கின்றோம். நம் அனைவருக்கும் உடனடியாக பதில் தெரிய வேண்டிய கேள்வியானது, இந்த உயிர்கொல்லி நோயைத் தடுப்பது எப்படி என்பதாகும். ஆனால் ஒருசில உணவு மாற்றங்களை செய்துக் கொள்வதால், நம்மை தாக்க வருகின்ற இந்நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.


குறைந்த கொழுப்புள்ள உணவு

உடல் பருமனாவது என்பது பல்வேறு விதமான தீவிர நோய்களுக்கான அறிகுறியாகும். அத்தகைய நோய்களில் ஒன்று தான் புற்றுநோய். ஆகவே தினமும் எடுத்துக் கொள்ளும் வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை குறைத்து உட்கொள்வது, கலோரியின் அளவை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.


காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுதல்

அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவைகள், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடவும் உதவுகிறது.


இறைச்சியை தவிர்க்கவும்

இறைச்சியை தவிர்த்து, குறிப்பாக பதனிடப்பட்ட இறைச்சியைத் தவிர்த்து, சைவ உணவு உட்கொள்வதை மேற்கொண்டால் புற்றுநோயை தடுக்க முடியும். அதிலும் இறைச்சி உணவானது பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. ஆகவே மெதுவாக ஒரு சைவ உணவு விரும்பியாக மாற சிறந்த முயற்சி செய்யலாம்.


நார்ச்சத்து நிறைந்த உணவு

நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள உணவில் நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான எளிய வழியானது காலை உணவின் போது வெள்ளை பிரட்டிற்கு பதிலாக கோதுமை பிரட்டை உண்ணுதல் வேண்டும் மற்றும் பழுப்பு அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும் உணவுகளைச் சேர்க்கவும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் உணவு வகைகளை உண்ணுதலால், புற்றுநோய் உட்பட, எந்த வகையான நோய்க்கு எதிராகவும் போராட முடியும். அதிலும் ஆப்பிள்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உண்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்றவை நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும். மேலும் இஞ்சி, பூண்டு போன்ற மசாலா பொருட்களையும் உணவில் சேர்க்க வேண்டும்.


சமையல் செய்யும் போது சுகாதாரத்தை பராமரிக்கவும்

ஆரோக்கியமான சமையல் செய்யும் முறையை பின்பற்றுதல் மற்றும் தூய்மையான சமையலறை போன்றவை நோயிலிருந்து உடலை தூரத்தில் வைக்க உதவுகிறது. ஆகவே காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும். மேலும் காய்கறிகளை அதிக நேரம் வேக வைத்தல் மற்றும் புதிதாக அன்று செய்யப்பட்ட புதிய உணவுகளை உண்ணுதல் என்ற அடிப்படை குறிப்புகளை பின்பற்றுவது மிக முக்கியமானதாகும்.


மது அருந்துதலில் கட்டுப்பாடு

எந்த வகையான உணவுகளையும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேப்போல மதுவை அதிகமாக உட்கொண்டால், புற்றுநோய் ஆபத்துக்கு, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது.


சோயா மற்றும் கால்சியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுதல்

கால்சியம் அதிகமுள்ள உணவுகள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க உதவும் உணவுகளாக கருதப்படுகிறது. மேலும் புரதம் அதிகமுள்ள சோயாவானது, சோயா மசாலா, சோயா பால் போன்ற பல்வேறு வகைகளில் சந்தையில் கிடைக்கப்பெறும் மிகச்சிறந்த உணவாகும்.
நன்றி:http://tamil.boldsky.com/