Home » , » லினோவாவின் K900 ஒரு சிறப்பு பார்வை...!

லினோவாவின் K900 ஒரு சிறப்பு பார்வை...!


இன்று மொபைல் சந்தையில் நிச்சயம் தனக்கென ஒரு நிரந்திர இடம் பிடித்துவிட்டது லினோவா மொபைல்கள் எனலாம்.

அந்த அளவுக்கு இன்று லினோவா மொபைல்களின் விற்பனை படு ஜோருங்க இந்த முறை நாம் பயன்படுத்தி பார்த்த லினோவா K900 மொபைலின் நிறை குறைகளை பார்போமா.


இந்த மொபைல் பார்க்க மிக அழகாக இருக்குங்க கைல இருக்கும்போதே ராயல் லுக்ல தான் இருக்குங்க மொபைல் 32ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட புதிய லினோவா k900 மொபைல்.

 மேலும் இது 5.5இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ் இதுல இருக்குதுங்க. மேலும், 2GHZ டியுல் கோர் பிராசஸர், 2ஜிபி ராம், ஆன்டிராய்ட் 4.2ஜெல்லிபீன் ஓஎஸ், 13மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 3ஜி, wi-fi, புளுடூத், 2500mAh பேட்டரி ஆகிய அம்சங்களை லினோவா k900 கொண்டுள்ளது.

சரி இதை யூஸ் பண்ணும்போது எப்படி இருந்துச்சுன்னு இங்க பாருங்க.... இதபத்தி பாக்கறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு சொல்லிடறேங்க இந்த K900 மொபைல் பேட்டரி செம சூடு ஆகுதுங்க சீக்கிரமே.

K900 ன் முதல் நாள்

இது எப்பவும் போலவே தாங்க போச்சு மொபைல வெறித்தனமா எல்லாரும் பாத்தாங்க அப்புறம் உள்ள புகுந்து என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கோ எல்லாமே பாத்து முதல் நாள் போச்சுங்க சரின்னு நைட் தூங்க போகும் போது சார்ஜ் போட்டேங்க ஒரு 10 நிமிஷத்துல மொபைல் என்னா ஹிட்டு...

இரண்டாம் நாள்

ரெண்டாவது நாள் வழக்கம் போல நெட் கேம் என விளையாடி சார்ஜ காலி பண்ணுனோம்ங்க இதோட கிராபிக்கல் ஆப்ஷன்ல்லாம் செமங்க நல்லா தான் இருக்குங்க

மூன்றாம் நாள்

அடுத்த நாள் தாங்க இதோட டிஸ்பிளேவே பாத்தோம் அருமையா தாங்க இருந்துச்சு 4 தனித்தனி செக்ஷன்ஸ் வெச்சு சூப்பரா இருந்துச்சுங்க என்ன மொபைல் பேட்டரி தான் நிக்கவே இல்லை டெய்லியும் சார்ஜ் பண்ணுணோம்ங்க

நான்காம் நாள்

 இது புல்லா மெட்டல் பாடி தாங்க அதனால் மொபைல் கொஞ்சம் வெயிட்டா தாங்க இருந்துச்சு பாக்கெட்ல வெச்சா ஆனா மொபைலில் இருக்கும் 2GB ரேம் மற்றும் 2GHz பிராஸஸரின் செயல்பாடு அருமைங்க நல்லா வேகமாதங்க மொபைல் இயங்குச்சு

ஐந்தாம் நாள்

மேலும் இந்த மொபைல் 16GB இன்டர்நெல் மெமரியில் நாம் பயன்படுத்த முடிந்தது 9.5GB மட்டும் தாங்க, மொபைல் கிளாரிட்டி எல்லாம் ஓ.கே ங்க நல்லாதான் இருக்கு

ஆறாவது நாள்

 அஞ்சு நாள் யூஸ் பண்ணி ரொம்ப போர் அடிச்சு போச்சுங்க இந்த மொபைல் திரும்பவம் கேம் தாங்க விளையாடுனேன் ஒரு நாள் புல்லா

ஏழாவது நாள்

 கடைசி நாளான ஏழாவதும் நாளும் சுமாரா மொபைல்ல யூஸ் பண்ணியாச்சுங்க இதோ விலை.ரூ.24,599 ங்க கொடுக்கற பணத்துக்கு வொர்த் தாங்க ஆனா இந்த பேட்டரி விஷயத்துல இவங்க இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்ங்க


நன்றி:http://tamil.gizbot.com/