Home » , » டீன்-ஏஜ் சிறுவர்களுக்கான சில சரும பராமரிப்பு குறிப்புகள்!!!

டீன்-ஏஜ் சிறுவர்களுக்கான சில சரும பராமரிப்பு குறிப்புகள்!!!

டீன்-ஏஜ் சிறுவர்களுக்கான சில சரும பராமரிப்பு குறிப்புகள்
நமது உடலுக்குள் பெருமளவில் மாற்றங்கள் நடக்கும் பருவமாக டீன்-ஏஜ் என்ற வளர்-இளம் பருவம் உள்ளது. தோல் அரிப்பு மற்றும் தோல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை கொண்ட பருவமாக டீன்-ஏஜ் உள்ளது.
பெரும்பாலான டீன்-ஏஜ் சிறுவர்கள் வெளியிலும், பள்ளியின் கடுமையான நேர பட்டியலுக்குள்ளும் அடைபட்டுக் கிடப்பார்கள். எனவே, அவர்களுடைய தோல் பகுதி எல்லாவிதமான வெளிப்புற மாசுபாடுகள் மற்றும் சூரியனின் நேரடி கதிர்வீச்சு விளைவுகளால் பாதிக்கப்படுபவையாக இருக்கும். அதிகமான மாற்றங்கள் நிகழும் உடலமைப்பு உள்ளதால் தோலில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டியதும் மற்றும் அதற்கான அறிவுரைகளை பின்பற்றவும் வேண்டும்.


டீன்-ஏஜ் சிறுவர்கள் வேகமாக வளருவதால், அவர்களின் ஊட்டச்சத்து தேவை சற்றே அதிகமாக இருக்கும். ஒரு டீன்-ஏஜ் சிறுவனமாக இருப்பவர், வளர்ச்சியடைந்தவர்களை விட அதிகமான வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். உங்களுடைய வளர்ச்சி ஹார்மோன்களை கவனிக்க உங்களுடைய உடல் இந்த சக்திகளை நிரம்பவும் எதிர்பார்க்கும். இந்த ஊட்டச்சத்துக்களில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அது பல்வேறு மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். அவற்றில் சில விளைவுகள் உங்கள் தோல் வழியாக வெளிவரும். டீன்-ஏஜ் சிறுவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாக தோல் அரிப்பு உள்ளது. பெரும்பாலான நேரங்கள் வெளியில் இருந்து விளையாடுதல் மற்றும் சுற்றுதல் என்று இவர்கள் இருப்பதால், போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதும் மற்றும் வியர்வையை தண்ணீர் குடித்து சமனப்படுத்துவதும் அவசியமாகும்.

அதே சமயம், டீன்-ஏஜ் சிறுவனின் தோலில் ஏற்படும் எல்லா மாற்றங்களுமே பிரச்னைக்குரியவையும் அல்ல. சில மாற்றங்கள் இயற்கையாகவே ஏற்படுபவையாகும். டீன்-ஏஜ் சிறுவரான உங்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். மூத்தவர்களிடமோ அல்லது மருத்துவரிடமோ இது குறித்து பேசுவது நன்மை தரும். சில நேரங்களில் தோல் தடித்தல் மற்றும் பிற மாற்றங்கள் ஆகியவை அலர்ஜியால் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு உங்கள் வயதோ அல்லது ஹார்மோனோ காரணமாக இருப்பதில்லை. நீங்கள் சுகாதாரமான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கோண்டு உங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் வலுவாகவும் வைத்துக் கொள்ளலாம்.

டீன்-ஏஜ் சிறுவர்களின் தோல் பாதுகாப்பு குறித்த சில டிப்ஸ்களை இங்கே நாங்கள் கொடுத்துள்ளோம்


உங்கள் தோலை அறிந்து கொள்ளுங்கள்

உங்களுக்கான தோல் பாராமரிப்பு பொருளையோ அல்லது வீட்டுத் தயாரிப்புகளையோ தேர்ந்தெடுக்கும் முன்னர் உங்கள் தோல் எத்தகையது என்று அறிந்து கொள்ள வேண்யடிது அவசியம். எண்ணைய் அதிகமாக உள்ள தோலை கொண்டவர்கள், சாதாரண சோப் கொண்டு தோலை கழுவ வேண்டும். எண்ணைய் துளைகளை சுத்தம் செய்ய ஆழமான சுத்தப்படுத்தும் பொருட்களை அழுத்தித் தேய்த்து பயன்படுத்துங்கள். எண்ணையுடைய தோலின் அழுக்குகளை அழுத்தித் தேய்த்து சுத்தப்படுத்துங்கள்.


தோலுக்கு SPF க்ரீம் தடவுங்கள்

டீன்-ஏஜ் சிறுவரான நீங்கள் பள்ளிக்கு செல்லாத பெரும்பாலான நேரங்களை உங்களுக்குப் பிடித்தமான வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதில் கழிப்பீர்கள். இதனால் உங்களுடைய தோல் அதிகளவு சூரியக் கதிர்களை எதிர்கொள்கிறது. எனவே உங்களுடைய தோலை SPF க்ரீம்களை கொண்டு பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும்.


நீர்மங்கள்

டீன்-ஏஜ் சிறுவர்கள் செய்யும் பொதுவான தவறாக இருப்பது அவர்களுடைய வளர்-இளம் பருவத்தில் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள தவறுவது தான். பெரும்பாலோரும் தவிர்க்கும் தண்ணீர், இயற்கையிலேயே கிடைக்கும் ஒரு நச்சு நீக்கும் நீர்மமாகும். நீங்கள் மிக, மிக அதிகமான அளவு தண்ணீரை குடிப்பதன் மூலமாக வியர்வையை சமனப்படுத்தவும், உடல் மற்றும் தோலின் அசுத்தங்களை சுத்தம் செய்யவும் முடியும்.


பருக்களை மென்மையாக கையாளவும்

பெரும்பாலான டீன்-ஏஜ் சிறுவர்களின் முகங்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக பருக்கள் உள்ளன. சில நேரங்களில், எந்தவித மருந்துகளையும் கொண்டு அந்த பருக்களை மறைக்க முடியாது. நீங்கள் அவற்றை அழுத்தி வெளியே எடுக்க முடிவு செய்தால், பருக்கள் வெளிவந்தவுடன் ஏற்படும் தொற்றுகள் ஏற்படாதவாறும் மற்றும் வடுக்கள் ஏற்படாமலும் இருக்குமாறு சற்றே கவனமாக செய்யவும். இதனை சுத்தமாக கைகளை கழுவிக் கொண்டு செய்யுங்கள் மற்றும் அந்த இடங்களை சுத்தம் செய்யும் கிளீன்ஸர்கள் கொண்டு தூய்மைப்படுத்தவும்.


பழங்களும் பயன்களும்

டீன்-ஏஜ் பையனாக இருந்தாலும் பேஸியல் மாஸ்க் மற்றும் ப்ரூட் ஸ்க்ரப்ஸ் போன்றவற்றை வாலிபர்களைப் போல போட்டுக் கொள்ளலாம். பப்பாளி, ஆரஞ்சு தோல் ஃ சாறு, வெள்ளரி, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி பொன்ற பல்வேறு பழங்களைக் கொண்டு வீட்டிலேயே தாயரிக்கப்பட்ட நிவாரணிகளை, தேனுடன் சேர்த்து உங்கள் தோலுக்கு புத்துணர்ச்சியூட்டவும் மற்றும் நச்சை நீக்கவும் செய்யலாம்.


உணவு

டீன்-ஏஜ் சிறுவனாகிய நீங்கள் முறையான சத்தான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவும் மற்றும் மோசமான எண்ணைய் உணவுகளை தவிர்க்கவும் செய்தால் தோலின் வெடிப்புகளை சரி செய்ய முடியும். வெள்ளரி, டார்க் பெர்ரி, திராட்சை, பீட்ரூட் ஆகிய தாவரங்கள், பழங்கள், கொட்டைகள் மற்றும் தானியங்கள் ஆகியவை நிறைந்த உணவினை உட்கொள்வதன் மூலமாக தோலை சுத்தமாகவும் மற்றும் இயற்கையாகவும் பராமரிக்க முடியும்.நன்றி:http://tamil.boldsky.com/