Home » , » கொய்யா சட்டினி செய்யலாம் வாங்க

கொய்யா சட்டினி செய்யலாம் வாங்க


என்னென்ன தேவை?

கொய்யாப் பழம் - 4,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் துருவல்  - 2 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?

கடாயில் சிறிதளவு எண்ணெயை விட்டு மிளகாய், சீரகம், கொய்யா துண்டுகளை சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.  அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.

நன்றி:http://www.sikams.com/