Home » , » பெண்களுக்கான முக்கிய அழகு குறிப்புகள்!!!

பெண்களுக்கான முக்கிய அழகு குறிப்புகள்!!!


ஒவ்வொரு டீன் ஏஜ் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய மேப் அப் ரகசியங்களில் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம். இது ஒரு வகையான கலை.

01 . கண்சீலர் போடுவது சுய விளக்கமளிக்கும். ஆனால் இதை செய்யும் போது தேய்த்து தடவி தவறு செய்கின்றனர்.  முகத்தில் இருக்கும் புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைப்பதற்காக போடப்படும் கண்சீலரின் பயன் இவ்வாறு தேய்ப்பதன் மூலம் முழுமையாக கிடைப்பதில்லை. இனிமேல் அதை பயன்படுத்தும் போது உங்கள் மோதிர விரலால் சிறிது எடுத்து மெதுவாகவும் இதமாகவும் தடவவுது சிறந்தது.


02 . அழகாகவும் பளபளப்பாகவும் கூந்தலை வைத்துக் கொள்ள சிறிது கடினம் தான். ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளித்தால் இதை நாம் நிச்சயம் பெற முடியும். நாம் பயன்படுத்தும் வேதிப் பொருட்களின் தாக்கமும் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் தலை முடியை சுத்தமாக வைக்க வேண்டும்.

03 .  வேசலின் எப்போதும் ஒரு அற்புத பொருளாக விளங்குகிறது. எந்த ஒரு தேவைக்கும் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக உதட்டிற்கு ஈரப்பதமூட்டும் வேலையாக இருந்தாலும், மேக்கப்பை துடைப்பதாக இருந்தாலும், உதட்டின் வறண்ட மேல் தோலை உரிப்பதற்காவும், முடியை உடைபடாமல் காக்கவும், காயம் அல்லது வெட்டு ஆகிய பல விஷயங்களுக்கும் வேசலின் பயன்படுகிறது.

04 .  நீங்கள் ஒரு டீன் ஏஜ் பெண்ணாக இருந்தால் முழு ஃபவுன்டேசனை தேர்ந்தெடுக்க சொல்ல மாட்டேன். இவை உங்களுக்கு விகாரமான முகத்தை அளிக்கக்கூடும். ஆனால் நீங்கள் BB கிரீம் அல்லது நிறத்தை அளிக்கும் மாய்ஸ்சுரைசர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை திரவம் போல் இருப்பதால் எளிதாக பயன்படுத்தலாம். இதை நாம் நேரடியாக பயன்படுத்தும் முன்பு கழுத்து பகுதியில் பயன்படுத்தி சரிபார்த்தல் நல்லது.

05 . கண் மை எப்போதும் கலைந்து போகும் பெண்களுள் ஒருவராக நீங்கள் இருந்தால் இதோ உங்களுக்கு ஒரு தீர்வு! கண் மையை பூசுவதற்கு முன் எண்ணெய் இழுக்கும் காகிதத்தை கொண்டு கண்களை சுற்றி உள்ள இடங்களில் நன்கு துடைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் கலையாத கண் மைகள் விற்பனையில் உள்ளது. அவைகளை வாங்கி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.


நன்றி:http://www.sikams.com/