Home » » பெண்களே! இந்த மாதிரியான ஆண்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க...

பெண்களே! இந்த மாதிரியான ஆண்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க...

டேட்டிங் காலத்தின் போது நாம் பல வகையான காதலனை பார்த்திருப்போம். மிகவும் மோசமான டேட்டிங் அனுபவத்தை பெற்ற பெண்களின் கூட்டு அறிவின் படி, எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் தவிர்க்க வேண்டிய ஆண்களின் பட்டியல் கிடைக்கும். டேட்டிங் செல்வதற்கு சில வகையான ஆண்கள் சுத்தமாக சரிப்பட்டு வரமாட்டார்கள். அப்படி ஒருவரை பார்த்தாலும் கூட, நீங்கள் அடுத்த கிரகத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கும்.

ஆண்களிடம் பெண்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாகும். ஆனால் அதற்காக ஆண்களை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் என்று கூறி விட முடியாது. ஆண்களை புரிந்து கொள்வது கஷ்டம் என்று கூறுவதற்கு அவர்கள் பெண்களின் மேல் வைத்துள்ள ஈடுபாடே காரணமாக விளங்குகிறது. இவ்வகையான காதலன் உங்களுக்கு அமைந்தால், காலம் கடத்தாமல் அவர்களை விட்டு விலகி விட வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால், இவ்வகையான ஆண்கள் வருங்காலத்தில் நல்ல கணவனாக இருக்க மாட்டார்கள்.

தன் காதலனை ஒரு நல்ல ஆணாகவும், நல்ல கணவனாகவும் பெண்கள் பயிற்சி அளிக்கும் பருவமாக கூட டேட்டிங்கை குறிப்பிடலாம். அதனால் அவரை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முடிந்தால், பிரச்சனையில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒரு வருடமாக பழகியும் கூட, இன்னமும் அவர் மாறாமல் அதே வகைகளின் கீழ் இருந்தால், அவரை விட்டு விலக வேண்டியது தான்.

அப்படிப்பட்ட ஆண்களின் வகைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களுடன் டேட்டிங் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தீராத விளையாட்டு பிள்ளை

இவர்கள் கடலை போடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். கல்லுக்கு சேலை கட்டினால் கூட விட மாட்டார்கள். அவருடைய கண் அசைவு, குறும்புகள், அழகு ஆகியவற்றை பார்த்து நீங்கள் அவர் மீது காதலில் விழுந்திருக்கலாம். ஆனால் அவரின் உண்மை குணம் தெரிந்து விட்டால், ஒதுங்கி விடுங்கள்.

நம் பில்லை கட்ட வேண்டும்

ஆண்கள் தான் எப்போதும் பில்களை கட்ட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. சில நேரம் பெண்கள் கட்டுவதிலும் ஒரு கிக் இருக்கவே செய்யும். ஆனால் அவரின் கிரெடிட் கார்டு பில்களை எல்லாம் உங்களை கட்ட சொன்னால், அவர் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்று தான் அர்த்தம். இது பொறுப்புகளை பகிர்வது ஆகாது.

தந்தையை போன்றவர்

உங்கள் காதலன் நீங்கள் எப்படி மாற வேண்டும் என்பதை பற்றியும், எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் நீண்ட நேரம் பாடம் எடுக்கிறாரா? ஏற்கனவே உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார், அப்படியிருக்க இன்னொன்று எதற்கு?

நான், நான் மற்றும் நான் என்று எண்ணமுடையவர்

வெளியே கிளம்புவதற்கு உங்களை காட்டிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாரா உங்கள் காதலன்? அப்படியானால் உங்கள் காதலன் தன்னை தானே காதலிப்பவர். அதனால் அவர் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி, அவ்வகை ஆண்களுடன் டேட்டிங் செல்வது வீண்.

அளவுக்கு மீறிய வளர்ச்சி

அவர் வாழ்க்கை முழுவதும் தன் அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருந்திருப்பார். அதனால் இன்னமும் வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். அதனால் அவருக்காக சமைப்பதற்கும், சுத்தப்படுத்துவதற்கும், தன் ஆடையை எடுத்து தருவதற்கும், ஏன் சாப்பாடு கொடுக்கவும் கூட உங்களை தான் எதிர்ப்பார்ப்பார். உங்களுக்கு வளர்ந்த ஒரு ஆணை தத்தெடுக்க விருப்பம் இல்லாத வரை, இப்படிப்பட்டவரிடம் இருந்து தள்ளி இருப்பதே நல்லது.

செண்டிமெண்ட் பாப்பா

பூக்கள் மற்றும் சாக்லேட்களுடன் உங்களுக்கு அப்பப்போ பரிசளித்து, பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவு வைத்துக் கொள்ளும் நபரை பார்ப்பது கடினமே. ஆனால் அதற்காக முதன் முதல் சந்தித்த நாளுக்காக எல்லாம் பரிசு அளிப்பதெல்லாம் சற்று ஓவர். அவ்வகையான உறவு ஒரு கட்டத்தில் பொய்யாக வெளிப்பட ஆரம்பிக்கும்.

முட்டாள் காதலன்

பார்க்க நன்றாக இருந்தாலும், அவருக்கு மூளை இருக்காது. அப்படியானால் முட்டாள்தனமான ஒருவரை உங்கள் காதலனாக நீங்கள் கொண்டுள்ளீர்கள். டேட்டிங் செய்ய அவர் வசதியானவராக இருக்கலாம். ஆனால் தலையில் ஒன்றும் இல்லாதவரோடு குடும்பம் நடத்த முடியாது.

சோம்பேறி காதலன்

இப்படிப்பட்டவர்கள் உணவு உண்ணுவது, தூங்கி கழிப்பது, எப்போதும் சோம்பேறித்தனமாகவே காலத்தை கடத்துவார்கள். நாட்கணக்கில் குளிக்க மாட்டார்கள். வெளியே செல்ல வேண்டுமானால் சுறுசுறுப்புடன் கிளம்ப மாட்டார்கள். சோம்பலை நீங்கள் நல்லொழுக்கம் என நீங்கள் எண்ணவில்லை என்றால், இவ்வகையான ஆண்களை தூக்கி எறியுங்கள்.

ஆல்ஃபா வகையறா

உங்களுக்கான அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார். அதற்கு நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் உங்களிடம் நன்றியுடன் இருக்க எதிர்ப்பார்ப்பார். அதிக ஆதிக்கம் நிறைந்தவராக இருப்பார்கள். நீங்கள் பயந்த குணம் உடையவர்கள் அல்ல என்றால், அவர்களை விட்டு வந்து விடுங்கள்.

அர்ப்பணிப்பு ஃபோபியா

உங்களுடன் இருப்பார், உங்களுக்கு உண்மையானவராக இருப்பார், வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வார், கட்டிலையும் பகிர்ந்து கொள்வார். ஆனால் நிச்சய மோதிரம் மாற்றிக் கொள்வோம் என சற்று அர்ப்பணிப்பை எதிர்ப்பார்த்தால், தப்பித்தோம் பிழைத்தோம், என அடுத்த கிரகத்துக்கே ஓடி விடுவார். இவ்வகை ஆண்கள் இப்படி உறவில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். அவர்கள் வேண்டாமே!

அம்மா பிள்ளை

இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களும் தன் அம்மாவிடம் நெருக்கமாக தான் இருப்பார்கள். ஆனால் அதற்காக எந்த ஆடை அணிவது, எப்போது கல்யாணம் செய்து கொள்வது, என்ன வேலை பார்ப்பது என அனைத்தையும் தன் தாயிடம் இருந்து எதிர்ப்பார்த்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கானவர் அல்ல. சுயமாக முடிவை எடுக்க கூடிய ஆணை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் உங்கள் மாமியார் தான் உங்கள் குடும்பத்தை திட்டம் போட்டு வழி நடத்துவார்.

குழப்பமுடைய சைகோ

மிகுந்த அறிவாளியாக இருந்து, மர்மமான அழகை கொண்டிருப்பார்கள். ஆனால் வருங்காலத்தைப் பற்றி குழம்பி போயிருப்பார்கள். பார்க்க நல்ல ஆணை போல் தெரிந்தாலும், அவருடைய குழம்பிய நிலையே நிரந்தரமானது. அவர்கள் பின்னால் சுற்றி நேரத்தை வீணாக்காதீர்கள்.

குறை கண்டு பிடிப்பவர்கள்

உங்கள் கால்களில் ஒழுங்காக வேக்சிங் செய்யவில்லை அல்லது ஏன் சாப்பிடும் போது அவ்வளவு சத்தமாக ஏப்பம் விட்டாய் என உங்கள் காதலன் அடிக்கடி குறை கூறுபவராக இருக்கிறார் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படியானால் பெற்றோர்களால் அதிகமாக அடி வாங்கப்பட்டு, மிலிட்டரி பள்ளியில் படித்த ஒரு ஆணாக அவர் இருக்க வேண்டும். இவர்களையும் தவிர்ப்பது நல்லது.