Home » » ஹாஃப் பாயில் தரும் ஆரோக்கிய வாழ்க்கை!

ஹாஃப் பாயில் தரும் ஆரோக்கிய வாழ்க்கை!

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும்.

முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள்.

ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது.

மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும். அதற்கு அதனை சிறிது நேரத்திக்கு வேக வைத்தாலே போதும், அடம் பிடிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொறித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.

அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.

அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டை இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும்.

ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை.

அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.

பொறித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே.