Home » » வெங்காயத்தாள் தயிர் பச்சடி

வெங்காயத்தாள் தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்:

வெங்காயத்தாள் - ஒரு கட்டு
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
செலரி - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.    

* தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.

* சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார்.

* சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.