Home » » வாயை பராமரிப்பதில் இந்திய ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!!

வாயை பராமரிப்பதில் இந்திய ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!!

வாய் பராமரிப்பு என்பது மனித உடல்நல பராமரிப்பு அமைப்பின் ஒரு சிக்கலான பகுதியாகும். அதனை அலட்சியம் செய்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். இப்படி அலட்சியம் செய்வதற்கு முக்கிய காரணமே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பலரும் அறியாததே. அப்படி அதனை பராமரிக்கும் சிலருக்கும் அதனை சரியான முறையில் செய்ய தெரிவதில்லை.

இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்லை என்றாலும் கூட, தொடர்ந்து சில பொதுவான தவறுகளைப் பலரும் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட சில தவறுகளை இப்போது பார்க்கலாமா...?

காலை உணவிற்கு சற்று முன் பல் துலக்குவது

நீங்கள் பல் துலக்கும் ஒவ்வொரு முறையும் பற்களின் இயற்கை எனாமல் அடுக்கை கொஞ்சம் தேய்த்து எடுத்து விடுவீர்கள். சிறிது நிமிடங்கள் கழித்து அது தானாக மீண்டும் தன் இடத்தில் அடங்கிவிடும். அதனால் பல் துலக்கிய 60 நிமிடங்களுக்குள் ஏதேனும் உணவை உட்கொள்ளும் போது பாதுகாப்பு அடுக்கு இல்லாத பற்களில் அமிலங்கள் படும். அதனால் வழக்கத்திற்கு மாறாக அதிக பாதிப்பு ஏற்படும்.

காலை உணவிற்கு பிறகு பல் துலக்குவது

பலரும் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு - காலை உணவை அருந்திய உடனேயே வாஷ் பேசின் சென்று பற்களை துலக்க துவங்குவது. அப்படி செய்வதால், எனாமல் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் பற்கள் இருக்கும் காரணத்தினால், பற்களை பாக்டீரியாக்கள் சுலபமாக ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இனிப்பு அருந்திய பிறகு பற்களை துலக்காமல் விடுவது

உடலில் உள்ள அமிலங்களுடன் எதிர் செயலாற்றும் கொடிய பொருட்களை இனிப்பு பண்டங்கள் கொண்டுள்ளது. இதனால் அது உங்கள் பற்களின் மீது எதிர் செயலாற்றும். இதன் காரணமாக உங்கள் பற்கள் வலுவிழந்து, நாளடைவில் பாதிக்கப்படும்.

துர்நாற்றத்தை போக்க கடினமாக பல் துலக்குதல்

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உண்டாக்குவதில் பெரிய பங்கை வகிப்பது உங்களின் நாக்காகும். அதன் பிறகு உங்களின் ஈறுகள். ஆனால் அதற்கும் உங்கள் பற்களுக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால் கடினமான முறையில் பல் துலக்குவதன் மூலமாக பற்களையும் தோள்பட்டை தசைகளையும் கொலை செய்வதை முதலில் நிறுத்துங்கள். மாறாக நாக்கையும், ஈறுகளையும் மென்மையாக துலக்குங்கள். கண்டிப்பாக அதன் வேறுபாட்டை நீங்கள் உணர்வீர்கள்.

தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்காதது

படுக்க செல்வதற்கு முன்பு பற்களை துலக்கி வாயை அலசுவதற்கு பலரும் சோம்பேறித்தனப்படுவார்கள். இதனால் அடுத்த 6-8 மணிநேரத்திற்கு எந்த ஒரு காரணமும் இன்றி, பாக்டீரியாக்களுக்கு உங்கள் வாய் ஒரு விளையாட்டு மைதானமாகி விடும்.

ஃபிளாஷ் செய்வதை தவிர்த்தல்

வாய் பராமரிப்பில் இந்தியர்கள் பலரும் தவிர்க்கும் முக்கியமான ஒன்று இதுவாகும். இது தேவையற்றது என நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்ணும் உணவில் ஒரு சிறிய அளவு பற்களின் துளைகளுக்குள் மாட்டிக் கொண்டு, அதனை போதிய காலத்திற்குள் எடுக்கவில்லை என்றால், பற்கள் சொத்தையாகி போவதை தடுக்க முடியாது.

உணவருந்திய உடனேயே மவுத் வாஷ் பயன்படுத்துவது

வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்கும் என நினைத்துக் கொண்டு உணவருந்திய உடனேயே மவுத் வாஷ் பயன்படுத்துவது பலரின் பழக்கமாக உள்ளது. மவுத் வாஷ் என்பது உணவிற்கு பிறகு உங்கள் பற்களோடு எதிர் செயலாற்றக் கூடிய ஒரு பொதுவான அமிலமாகும். அதனை பயன்படுத்த வேண்டுமென்றால், உணவருந்திய 45 நிமிடங்களுக்கு பிறகே அதனை பயன்படுத்த வேண்டும்.

முறையான பரிசோதனைக்கு செல்லாமல் இருத்தல்

வாயை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள 6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகுவது சிறந்த பழக்கமாக விளங்கும். அதற்கு காரணம் வாய் என்று வந்து விட்டால், நம் கண்ணுக்கு தெரியாமல் பல பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு கொண்டிருக்கும். அதனால் முழுமையான பாதிப்பிற்கு முன், பையில் இருந்து கொஞ்சம் செலவு செய்தால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டீர்கள்.