Home » » உங்க பாய் ஃப்ரெண்ட்டோட சண்டையா..? அதை சரி பண்ணப் போறீங்களா..? அப்ப இதப் படிங்க...

உங்க பாய் ஃப்ரெண்ட்டோட சண்டையா..? அதை சரி பண்ணப் போறீங்களா..? அப்ப இதப் படிங்க...

விரிசல் விட்ட பாய் ஃப்ரெண்ட்டோட நட்ப எப்படி சரி செய்யறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா? அட நட்புல சண்ட சச்சரவு பிரிதல் சேருதல் எல்லாம் சகஜம் தாங்க. திடீரென்று இதுப்போல விரிசல்கள் உண்டானால் அதைக் கண்டு நீங்கள் கலங்க வேண்டியதில்லை.
உண்மையை சொல்லப்போனால் உங்கள் மனதில் உங்கள் உறவுகள் மற்றும் அதற்கான தேவைகள் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இருந்தால், சூழ்நிலைகளை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக ஆக்கிவிடலாம். அவனை விட்டு விலக முடிவெடுத்தீர்களானால், அது வேறு விஷயம். ஆனால் அவன் உங்களுக்குத் தேவை என்பதில் தீர்மானமாக இருந்தால், அதற்குத் தகுந்தவாறு உடனடி முயற்சிகளை மேற்கொண்டு விரிசலை சரிசெய்யத் தேவையான வழிமுறைகளைக் கண்டறிந்து பாதிப்புகளை உடனடியாகக் குறைக்க வேண்டியது அவசியம்.

உறவின் ஆரம்பக் கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வதுண்டு. ஆனால் காலம் செல்லச் செல்ல ஒருவரிடம் மற்றொருவர் அதிகம் உரிமை எடுத்துக் கொள்வதால், நட்பில் விரிசல் ஏற்பட அதுவே ஒரு பொதுவான காரணமாகி விடுகிறது. உண்மையில் நீங்கள் உறவின் மீது அக்கறை கொண்டவர்களானால், நீங்கள் சில முக்கிய விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டு, உறவுகள் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் உங்கள் பாய் ஃப்ரெண்ட்டை சமாதானப்படுத்த வேண்டியது அவசியம். உங்களிடையே உள்ள உறவு உண்மையில் ஆழமான ஒன்றானால், இதனைச் செய்வது மிகவும் சுலபம். இதோ உங்களுக்கான ஆலோசனைகள்...

தொடர்பு கொள்ள முயலுங்கள்

உறவின் விரிசல்களுக்குப் பிறகு சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருப்பது நல்லது தான் என்றாலும், சிறிது காலம் கழித்து தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் அமைதி நீடிக்குமானால், உடனடியாக அந்த அமைதியை உடைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். இது ஒரு சிறிய குறுந்தகவல் மூலமாகவோ அல்லது போனில் அழைத்து ஒரு ஹாய் சொல்லுவதாகவோ கூட இருக்கலாம். உங்களின் ஈகோவை (அகம்பாவம்) விட்டுவிட்டு யதார்த்தமாக எதுவும் நடக்காததைப் போல், அவனை அழைத்துப் பேசுங்கள். அவனை எப்படி சமாளிப்பது என்று குழம்பி நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் ஒரு படி முன்னே செல்லுங்கள்.

மன்னிப்புக் கோருதல்

நாம் அனைவருமே தவறு செய்பவர்கள் தான் என்பதோடு, அது மனிதனின் இயல்பும் கூட. உங்கள் பாய் ஃப்ரெண்ட் உங்களை வெறுப்பேற்றும் வகையில் ஏதேனும் செய்திருந்தால் அவனை இதயபூர்வமாக மன்னித்துவிட்டு, அவன் செய்த தவறுகளை மறந்துவிடுங்கள். அவன் வெறுப்படையும் வகையில் நீங்கள் ஏதேனும் செய்திருந்தால், கொஞ்சமும் தயங்காமல் மன்னிப்பைக் கேட்டுவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் மனம் லேசாவதை உணர்வீர்கள்.

கருத்து வேறுபாடு

உங்கள் பாய் ஃப்ரெண்ட்டை சமாதானம் செய்யும் போது, அதில் வேறுபாடான கருத்துக்களை நீங்கள் தவர்க்க வேண்டியது அவசியம். விவாதங்களில் மாட்டிக்கொள்ளாமல் அறவே தவிர்ப்பது அவசியம். சமாதானம் செய்வதன் முக்கிய நோக்கமே உறவினை வலுப்படுத்துவது தான். எனவே பழைய குப்பைகளை கிளறாமல் உறவுகள் கெடாமல் செயல்பட வேண்டியது அவசியம்.

அவனை அணைத்துக் கொள்ளுங்கள்

ஒரு அரவணைப்பு ஆயிரம் காயங்களுக்கு மருந்து. ஆமாம் நீங்கள் அணைத்துக் கொள்வதை உங்கள் பாய் ஃப்ரெண்ட் நிச்சயம் விரும்புவார். நீங்கள் சமாதானமாக போக முயலும் போது இதைச் செய்யுங்கள். உண்மையில் உறவை சரிசெய்வதில் இந்த விஷயம் முக்கிய பங்கு வகிக்கும்.

தனியாக அவனுடன் நேரத்தை செலவிடுங்கள்

அவனுடன் நீங்கள் செலவிடும் உருப்படியான நேரம் உங்கள் உறவினை பலப்படுத்துவதில் மிகவும் முக்கியம். அதன் முடிவில் ஒரு மகிழ்ச்சியான சுற்றுலாவையோ அல்லது கடற்கரை விருந்துக்கோ செல்லத் திட்டமிடுங்கள். அன்பு ததும்பும் தனிப்பட்ட தருணங்கள் உறவினை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். என்ன? இப்போ உங்களுக்கு உங்க பாய் ஃப்ரெண்ட சரி கட்டுறதுன்னு புரிஞ்சுருச்சா? நல்லது. இனி உங்கள் உறவுகளை கவனமுடன் கையாளுங்கள். சண்டைக்குப் பிறகு சமாதானம் உங்கள் உறவினை மேம்படுத்தும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. உங்களுக்கு அவனை திரும்பப் பெற ஆசையிருந்தால், அதற்கான வழியும் கண்டிப்பாக பிறக்கும்.. ஆல் தி பெஸ்ட்...

நன்றி:http://tamil.boldsky.com