Home » » பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி

பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி

பேஸ்புக் பயன்படுத்துறவங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம், ஒரு வகையை சேர்ந்தவங்க எங்க போனாலும் போட்டோ பிடிச்சு அதை பேஸ்புக்கில் அப்டேட் செய்யுறவங்க, இன்னும் சிலர் எப்போவாவது பேஸ்புக் வருவது வந்தாலும் கேம்ஸ் மட்டும் விளையாடி மற்றவர்களுக்கு கேம் ரிக்வஸ்ட்களை அனுப்புவது.



ஒரு சிலருக்கு கேம் விளையாட பிடிக்கும், ஒரு சிலருக்கு கேம் விளையாடுவது பிடிக்காது, இருந்தும் உங்க நணப்ரகள் தொடர்ந்து கேம் ரிக்வஸ்ட் கொடுக்கின்றார்களா அப்ப அதை எப்படி ப்ளாக் செய்வது என்று  பாருங்க

பேஸ்புக்

முதலில் பேஸ்புக் சைன் இன் செய்யுங்கள்

இப்போ வலது பக்கம் இருக்கும் டவுன் பட்டனை க்ளிக் செய்யுங்கள்

டவுன் பட்டனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

செட்டிங்ஸ் ஆப்ஷனின் இடது புறத்தில் ப்ளாக்கிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

ப்ளாக்கிங் க்ளிக் செய்தவுடன் மேனேஜ் ப்ளாக்கிங் என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும்

மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனில் உங்களை கடுப்பாக்கும் அப்ளிகேஷன்கள், தேர்வு செய்யலாம். இந்த ஸ்கிரீனில் ப்ளாக் யூசர்ஸ், ப்ளாக் ஆப் இன்வைட் என உங்களுக்கு இடையூறாக இருக்கும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும்