Home » » 5 இன்ச் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.3,999க்கு வெளியானது

5 இன்ச் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.3,999க்கு வெளியானது

வியு Wiio நிறுவனம் Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஈபே தளத்தில் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் மிக குறைந்த விலையில் 3ஜி சேவை கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போனாக இது இருக்கின்றது.

Wi ஸ்டார் 3ஜி டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. இதில் சாதாரண சிம் கார்டு மற்றும் மைக்ரோ சிம் கார்டும் பொருந்தும். 5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டுள்ளது.

மேலும் 4ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத் கொண்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது

நன்றி http://tamil.gizbot.com