Home » » இன்றைய ராசிபலன்- 09-01-2015

இன்றைய ராசிபலன்- 09-01-2015

மேஷம்


மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்


ரிஷபம்


ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப் பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


மிதுனம்


மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


கடகம்


கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


சிம்மம்


சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


கன்னி


கன்னி: தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி இலக்கை எட்டும் நாள்.


துலாம்


துலாம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்த,பந்தங்கள் தேடி வருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.


தனுசு


தனுசு: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


மகரம்


மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


கும்பம்


கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


மீனம்


மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்கள் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.நன்றி: http://astrology.dinakaran.com