Home » » இன்றைய ராசிபலன் - 11-01-2015

இன்றைய ராசிபலன் - 11-01-2015

மேஷம்


மேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப் பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: இன்றையதினம் புதிய திட்டங்கள் நிறை வேறும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள்.  கனவு நனவாகும் நாள்.


மிதுனம்


மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


கடகம்


கடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


சிம்மம்


சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


கன்னி


கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள் வார்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


துலாம்


துலாம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


தனுசு


தனுசு: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத் தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


மகரம்


மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உறவினர்கள் மத்தி யில் மதிக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


கும்பம்


கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


மீனம்


மீனம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


நன்றி:http://astrology.dinakaran.com