Home » » இன்றைய ராசிபலன் - 13-01-2015

இன்றைய ராசிபலன் - 13-01-2015

மேஷம்

 இன்று, குடும்ப உறவினர் ஒருவருக்காக, சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்கின்ற சூழல் உருவாகலாம். அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற புதிய நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். பணவரவும், நன்மையும் திருப்திகரமாக வந்து சேரும். உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று, உங்களின் வெளி வட்டார தொடர்பு, தொந்தரவு தரலாம். நம்பிக்கையுடன் செயல்படுவதால், தகுந்த பலன் கிடைக்கும். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.


மிதுனம்

இன்று, எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். அளவான பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும்.

கடகம்

இன்று, உங்கள் செயலில் சுறுசுறுப்பும், அறிவுத்திறமையும் பரிமளிக்கும். திகைப்பு தந்த பணியை, எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். நண்பர், முன்பு பெற்ற உதவிக்கு, நன்றிக்கடன் செலுத்தும் வகையில் செயல்படுவார். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று, மாறுபட்ட கருத்து உள்ளவர், உங்களிடம் பரிவுடன் பேசுவது போல் பாசாங்கு செய்வர்; அவர்களிடம் நீங்கள் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நடத்த, கூடுதல் மூலதனம் தேவைப்படும். காலமுறை உணவுப்பழக்கம், உடல் நலம் சீராக அமைய உதவும். அதிக விலையுள்ள பொருளை இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

கன்னி

இன்று, உங்கள் செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். இதனால், கடந்த நாட்களில் தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிநிலை அதிகரித்து, மனதில் நம்பிக்கை கொள்வீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். இல்லறத்துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.

துலாம்

இன்று, உங்கள் மனதில் சிறு அளவிலான வருத்தம் வந்து, பின்னர் சரியாகும். எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறை தாமதமின்றி சரி செய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று, உங்கள் மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். கடந்த நாட்களில் அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து, பலரும் வியப்படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர்களுக்கு உதவி புரிந்து, அவர்களின் வாழ்த்து பெறுவீர்கள்.

தனுசு

இன்று, உங்கள் செயல்களில் தகுந்த நிதானம் கடைபிடிப்பீர்கள். எதிர்பார்த்த பலன் உரிய வகையில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருளை வாங்குவீர்கள்.

மகரம்

 இன்று, உங்கள் செயல்களில் மேம்போக்கான தன்மையை பின்பற்றுவீர்கள். இதனால், சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, சில மாற்றம் செய்வது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். காலக்கெடு தவறிய உணவுப் பொருளை கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பொறுப்புணர்வுடன் பின்பற்றவும்.

கும்பம்

இன்று, உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். சகிப்புத்தன்மையை பின்பற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். கூடுதல் உழைப்பு, தொழில், வியாபார நடைமுறையை சீராக்கும். சேமிப்பு பணம், முக்கிய செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.

மீனம்

இன்று, உங்கள் செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கான தேவை நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள், சிறப்பாக பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள்.


நன்றி:http://www.dinamalar.com